Degree முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
EDII என்னும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Project Coordinators, Business Development Executive, IT Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
Project Officers, Project Coordinators, Business Development Executive, IT – Manager, Marketing Executive, Multi Media Executive, Fashion Designer, Enterprise Support Associate, Finance Officer, Project Manager, Master Trainer, Credit Linkage Expert மற்றும் Market Linkage Expert ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (EDII) காலியாக உள்ளது.
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Rural Management, Social work, Economics, Computer Application, Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, B.Com, BA, BBA, Master Degree, MBA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த EDII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Exams Daily Mobile App Download
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.3,60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
இந்த EDII நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மத்திய அரசு விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை (Resume) தயார் செய்து விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் [email protected], [email protected], [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (05.09.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Sc
Yes