தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை பரிசாக ரூ.5000 வழங்க சொன்ன திமுக அரசு இந்த முறை பரிசுத்தொகை எதுவும் வழங்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருக்கிறார்.

பொங்கல் பரிசு

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக ரேஷன் அட்டைதாரருக்கு பொங்கல் பரிசாக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பரிசாக வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கியது. இதனால் இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இந்த முறை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான திமுக அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இணைச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருப்பதால் அதிமுக ஆட்சியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, சிவகாசி பகுதியில் இன்று (பிப்.7) தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி இருக்கிறார்.

தீ விபத்தில் சிக்கிய “யாரடி நீ மோஹினி” சீரியல் ஸ்ரீகுமார் – மீண்டது எப்படி? உணர்ச்சிகரமாக பேட்டி!

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது ரூ.2,500 பொங்கல் பரிசாக கொடுத்திருந்தோம். அப்போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என்று சொல்லி திமுக கட்சி வலியுறுத்தியது. ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு எந்த ஒரு நலத்திட்ட உதவியையும் செய்யவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் முடிவுற்ற திட்டங்களை தான் தற்போது திறந்து வைத்துள்ளது’ என்று பேசி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!