தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த ஓய்வூதியம் – முதல்வர் வெளியிட்ட ஆணை!

0
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த ஓய்வூதியம் - முதல்வர் வெளியிட்ட ஆணை!
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த ஓய்வூதியம் - முதல்வர் வெளியிட்ட ஆணை!
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த ஓய்வூதியம் – முதல்வர் வெளியிட்ட ஆணை!

தமிழகத்தில் பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களுக்கு உதவி புரியும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதனை தற்போது மும்மடங்கு உயர்த்தி தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

ஓய்வூதியம் உயர்வு

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களின் முதுமை காலத்தில் உதவி புரிவதற்காக ரூ.500 மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்பு இத்திட்டம் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவு பெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2011ம் ஆண்டு முதல் இவர்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கடந்த 11 ஆண்டுகாலமாக ரூ.1000 மட்டுமே ஓய்வூதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1000 ரூபாயானது தற்போது அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்று ஓய்வூதியதாரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அத்துடன் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பதிவு பெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு ஓய்வூதிய தொகையை ரூ.3000 ஆக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதிரடியாக மூடப்பட்ட இந்தியாவின் முக்கிய வங்கி? RBI உத்தரவு – வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை?

Exams Daily Mobile App Download

தமிழக அரசு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஆணை ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை நடப்பு ஆண்டு முதல் இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தொகையை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியத்தார்கள் குஷியில் உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!