மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!!

0
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!!
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!!
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி படிப்பை இடைவிடாது பயில அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதையடுத்து மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. இதே போல் மத்திய அரசும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. மேலும் இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பயிலும் சீக்கியா், புத்த மதத்தினா், இஸ்லாமியா், கிறிஸ்தவா், ஜெயின், பாா்ஸி உள்ளிட்ட மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களும், 12ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பை பயிலும் மாணவிகளும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நாளை (அக். 13) இந்த ஏரியாக்களில் மின்தடை – பொதுமக்களுக்கு அலர்ட்!

Exams Daily Mobile App Download

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களின் கல்வி நிலையத்திடம் இருந்து யுடிஐஎஸ்ஈ, ஏஐஎஸ்ஹெச்ஈ, என்சிவிடி குறியீட்டு எண்ணை பெற்று கொண்டு அதன்பின்பு விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க தேவையான வழிமுறைகளும் மத்திய அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து பள்ளி படிப்பின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வருகிற 15ம் தேதி அன்றும் பள்ளி மேற்படிப்புக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி அன்றும் கால அவகாசம் முடிவடைய உள்ளது. அதனால் இந்த கல்வி உதவித்தொகைக்கு அனைத்து மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!