ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

0
ஜீ தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சிக்காக அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!
ஜீ தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சிக்காக அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!
ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

ஜீ தமிழில் சர்வைவர் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்வைவர் நிகழ்ச்சி:

தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கு போட்டியாக ஜீ தமிழ் மற்றும் சன் டிவியிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சினிமாவில் பிரபலமான ஹீரோக்கள் நிகழ்ச்சியை நடத்துவது ட்ரெண்டாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அதே போல சன் டிவியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் கமெண்ட்ஸ்!

இவர்களுக்கு போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழ் திரை உலகின் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ரியாலிட்டி ஷோ கடந்த 12ம் தேதி முதல் ஒளிபரப்பட்டு வருகிறது. ஆப்ரிக்காவின் தீவு ஒன்றில் நடந்து வரும் இந்த ஷோவில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிர ஆலோசனை!

இந்த சர்வைவர் நிகழ்ச்சி இதுவரை நான்கு நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அர்ஜுன் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சிக்காக அர்ஜுன் ஐந்து கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பளம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் கமல் வாங்கும் சம்பளத்தை விட குறைவு தான். மேலும் சர்வைவர் தமிழில் ஹிட் ஆனால் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சம்பளம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!