விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் கமெண்ட்ஸ்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' முதல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வரை - டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' முதல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வரை - டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் மொழியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சில முன்னணி சீரியல்களின் இந்த நாளுக்கான ப்ரோமோக்கள் மற்றும் அதன் மீதான ரசிகர்களின் பார்வை மற்றும் கருத்துக்கள் குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

சீரியல் ப்ரோமோ

முன்பெல்லாம் வீடுகளில் இருக்கும் குடும்ப பெண்களின் பொழுதுபோக்கு தான் சீரியல் என கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் சீரியல் பார்க்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் வாரம் முழுவதும் ஒளிபரப்பப்படும் பல்வேறு சீரியல்களுக்கு, ஒவ்வொரு நாளும் ப்ரோமோ என்ற அந்த வாரத்துக்கான சுருக்கமான கதைக்களம் வெளியாகும். அப்படி வெளியிடப்படும் ப்ரோமோக்கள் தான் ரசிகர்களை சீரியல் பார்க்க வைக்க தூண்டுகிறது. இருந்தாலும் ப்ரோமோ வெளியாகும் அனைத்து சீரியல்களும் மக்களின் பேவரைட்டாக இருப்பதில்லை.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று – மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்!

என்றாலும் சில சீரியல்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு வாரத்திலும் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களை அதன் TRP ரேட்டிங்கை வைத்து கண்டுகொள்ளலாம். தற்சமயம் இந்த வாரம் வெளியான சீரியல் ப்ரோமோக்களில் முன்னணி இடத்தை பெற்றுள்ள முதல் 5 சீரியல்களும், அதன் ப்ரோமோ மீதான ரசிகர்களின் கமெண்டுகளும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக, விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ப்ரோமோவுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏனென்றால் ரசிகர்கள் எதிர்பாராதவிதத்தில் லட்சுமி அம்மாவின் மரணம் தொடர்பான காட்சிகள் இன்றைய தினத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ப்ரோமோ மீதான ரசிகர்களின் கருத்துக்கள், நாடகமாக இருந்தாலும் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது, கண்ணன் கடைசியில் எம்.மகன் படத்தின் வடிவேலு போல ஆகிவிட்டார், அம்மா முகத்தை பார்க்க முடியாத கண்ணனுக்கு இது பெரிய தண்டனை, உயிரோடு இருக்கும் அந்த அம்மாவுக்கு உண்மையிலேயே சடங்கு பண்றீங்க என கூறுகிறது.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

அடுத்தபடியாக, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ப்ரோமோவுக்கு, இந்த சீரியல் பார்ப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு, ப்ரோமோ எரிச்சல் பட வைக்கிறது, முட்டாள் தனமான நாடகமாக இது இருக்கிறது, கதையில் ஒரு லாஜிக் இல்லை, கண்ணம்மாவை கொஞ்சம் போல்ட் பொண்ணா காட்டுங்க என ரசிகர்களின் கமெண்டுகள் நீள்கிறது. அடுத்ததாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ப்ரோமோவுக்கு, செழியனுக்கு கல்யாணம் அவசியமா, நல்ல சீரியலை இப்படி ஆக்கிட்டீங்களே என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியலை பொருத்தளவு, சினிமா படத்தை அப்படியே காப்பியடித்துள்ளனர், இந்த விபத்து காட்சிகள் இன்னும் ஒரு வாரத்துக்கு போகும் போல என ரசிகர்களிடையே சற்று சலிப்பு தட்டியுள்ளது. இறுதியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோவிற்கு, அனுவின் ஆட்டத்திற்கு அர்ஜூனும் செண்பகமும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், காத்திருந்தோம் காத்திருப்போம் நாளை வரை செண்பகம் அரவணைப்பில் ரோஜா என ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை கொடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!