சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிர ஆலோசனை!

0
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிர ஆலோசனை!
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிர ஆலோசனை!
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிர ஆலோசனை!

சென்னையில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் முதலியன மூடப்பட்டன. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.

Flipkart நிறுவனத்தின் 1,00,000 வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 15% அறிவிப்பு – முழு விவரம் இதோ!

அதனை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் பகுதிகளை தொடர்ந்து சென்னையில் நோய் பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

சென்னையில் நேற்று முன்தினம் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. நேற்று இது மேலும் அதிகரித்து 226 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்பட்டதன் காரணமாக கொரோனா 3ம் அலை பரவுவதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்படும் எனவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!