தமிழகத்தில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

0
தமிழகத்தில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது. மேலும் இந்த நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் நியமனம் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நேற்று முதல் நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்,

அந்த செய்திக் குறிப்பில், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 04.07.2022 முதல் 06.07.2022 மாலை 5 வரை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.வி.ஜெயசந்திர பானு ரெட்டி , இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

TNHRCE 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

மாவட்டக் கல்வி அலுவலக முகவரி :

  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் , கிருஷ்ணகிரி – [email protected]
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் , மாத்தூர் – [email protected]
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், முல்லை நகர், ஓசூர் – [email protected]
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், தேன்கனிக்கோட்டை – [email protected]

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!