தமிழகத்தில் வரும் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் விதமாக வரும் ஜூலை 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்புகளை செய்து வருகிறது. இதில் குறிப்பாக ஒரு அரசுத் துறையில் காலியாக இருக்கும் 5,000 இடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் போட்டியிட்டு வருவதால் ஒவ்வொரு பதவிக்கும் ஏகப்பட்ட போட்டிகள் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இளைஞர்களுக்கான 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு தனியார் துறைகள் மூலமாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் வரும் 8 மற்றும் 22ம் தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் இடைக்கால தடை – வழக்கு விசாரணை!

இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க இருக்கிறது. அதனால் மாவட்டத்தில் உள்ள 8, 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி படிப்பு முடித்தவர்கள், பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!