தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் இடைக்கால தடை – வழக்கு விசாரணை!

0
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் இடைக்கால தடை - வழக்கு விசாரணை!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் இடைக்கால தடை - வழக்கு விசாரணை!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் இடைக்கால தடை – வழக்கு விசாரணை!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள 13,000க்கு மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் ஆசிரியர் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்காலிக பணியிடம்:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் இயங்கி வருகிறது. குறிப்பாக, நடப்பு கல்வியாண்டில் அரசின் பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் இல்லை பற்றாக்குறை நிலவியது. இதனை சரி செய்ய புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்காலிக பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் தற்போது சுமார் 30,000க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நேரத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதால் உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை வெளியீடு!

இந்த இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 13 மாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாமல் உள்ளனர். இது குறித்து வழக்கு விசாரணையின் போது விளக்கமளித்த அரசு தகுதியான ஆசிரியர்களே தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கு நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வழக்கு விசாரணை ஜூலை 8ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here