Disney + Hotstar பயனர்களுக்கு ஷாக் நியூஸ் – VIP சந்தா ரத்து!

0
Disney + Hotstar பயனர்களுக்கு ஷாக் நியூஸ் - VIP சந்தா ரத்து!
Disney + Hotstar பயனர்களுக்கு ஷாக் நியூஸ் - VIP சந்தா ரத்து!
Disney + Hotstar பயனர்களுக்கு ஷாக் நியூஸ் – VIP சந்தா ரத்து!

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் பலரும் தங்களது பொழுதை எளிதாக கழிக்கும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை OTT தலங்கள் கொடுத்து வருகிறது. இதில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் OTT தலமான Disney+ Hotstar செயலியில் 3 புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

OTT தலம்

உலகின் மிக முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக OTT தலங்கள் உருமாறி வருகிறது. முன்பெல்லாம் ஊருக்கு ஒரு தொலைக்காட்சி இருந்த காலம் போய், பின்னர் வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி என்ற வகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் தற்பொழுது வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைக்காட்சி என்ற வகையில் சேவைகள் எளிதாகி விட்டது. புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், தற்பொழுது அனைவரது கைகளில் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் இவ்வகையான பொழுதுபோக்கு சேவைகளை அளிக்கிறது.

Airtel, Jio and Vi வழங்கும் திட்டங்கள் – அமேசான் பிரைம் & நெட்ஃபிளிக்ஸ் இலவசம்!

இது தவிர சினிமா என்றொரு மாய உலகத்தையும், இந்த மொபைல்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதாவது புதிதாக உருவாக்கப்பட்டு வரும் OTT தலங்கள் பல புதிய திரைப்படங்களையும், தொடர்களையும் உடனடியாக காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவைகள் சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று (ஜூலை 27) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், ஹாட்ஸ்டார் செயலியில் 18 புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடர்கள் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மல்டிப்ளெக்ஸ் திரைப்படங்களை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் டிஸ்னிக்கு சொந்தமான இந்த ஸ்ட்ரீமிங் சேவையில், இனி டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா இருக்காது. அதாவது VIP ஹாட்ஸ்டாருக்கு சொந்தமான சில ஹாலிவுட் திரைப்படங்கள், நேஷனல் ஜியோகிராஃபி, ஷோடைம், சேர்ச்லைட் பிக்சர்ஸ் போன்ற சேவைகளை இனி அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு பதிலாக வரும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாதாரர்களுக்கு மூன்று புதிய திட்டங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த சேவைகள் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் படி மொபைல் பதிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.499, சூப்பர் பதிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.899, பிரீமியம் பதிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.1,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது VIP (ரூ.399) சந்தாவை விட ரூ.100 அதிகமாகும். ஒருவேளை நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரராக இருந்தால் ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்த முடியும். மேலும் ரூ.499 க்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் சூப்பர் சேவைகளை, இரண்டு சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும். இதன் மூலம் HD வீடியோ தரத்தையம் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் சூப்பர் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்கள் வெப்சைட், மொபைல் மற்றும் லிவிங் ரூம் சாதனம் வழியாக இந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!