Airtel, Jio and Vi வழங்கும் திட்டங்கள் – அமேசான் பிரைம் & நெட்ஃபிளிக்ஸ் இலவசம்!

0
Airtel, Jio and Vi வழங்கும் திட்டங்கள் - அமேசான் பிரைம் & நெட்ஃபிளிக்ஸ் இலவசம்!
Airtel, Jio and Vi வழங்கும் திட்டங்கள் - அமேசான் பிரைம் & நெட்ஃபிளிக்ஸ் இலவசம்!
Airtel, Jio and Vi வழங்கும் திட்டங்கள் – அமேசான் பிரைம் & நெட்ஃபிளிக்ஸ் இலவசம்!

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகிய நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முன்னர் வழங்கி வந்த சலுகைகளை விட தற்போது போட்டிபோட்டுக் கொண்டு அதிக சலுகைகளை வழங்கி வருகின்றன. அதில், கூடுதலாக அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் சந்தாக்களையும் இலவசமாக வழங்கி வரும் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

இலவச சந்தா திட்டங்கள்:

தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கினால் வீட்டிற்குள் முடங்கி போயுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் மக்களுக்கு பொழுதுபோக்காக பெரிதும் கைகொடுப்பது OTT தளங்கள் தான். தொடர்ந்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டின் விளைவால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்கள் அனைத்தும் OTT தளங்களில் மட்டுமே வெளியிடப்படுகிறது.

ரூ.5.57 லட்சம் கோடி, 86% அதிகரிப்பு – நடப்பு நிதியாண்டில் நிகர வரி வருவாய்!

அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. தற்போது இலவசமாக OTT தளங்களின் சந்தாவையும் சில நிறுவனங்கள் வழங்கி வருகிறது. பயனர்கள் OTT சலுகைகளின் வருடாந்திர சந்தாவை தனியாக பெற ரூ.10,000 செலவு செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் தற்போது இந்த சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் தனது ரூ .131 மற்றும் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும், ரூ .499, ரூ .999 மற்றும் ரூ. 1,599 போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு அமேசான் பிரைம் சலுகையை ஒரு ஆண்டு சந்தாவை இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவிற்கான அணுகலையும் வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

ஜியோ:

ஜியோ நிறுவனம் தனது ரூ.939, ரூ.599, ரூ.799, ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் மற்றும், ரூ .999, ரூ.1,499, ரூ 2,499, ரூ.3,999 மற்றும் ரூ.8,499 ஆகிய பிராட்பேண்ட் திட்டங்களுக்கு அமேசான் பிரைம் நன்மைக்கான அணுகலை இலவசமாக வழங்குகிறது. இதே போல், இந்த அனைத்து திட்டங்களுக்கும் நெட்ஃபிளிக்ஸ், மற்றும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கான இலவச சந்தாவை வழங்குகிறது. மேலும், ஜியோவின் ரூ .1499, ரூ .2499, ரூ .9999 மற்றும் ரூ .8499 ஆகிய பிராட்பேண்ட் திட்டங்களும் ஒரு ஆண்டுக்கான நெட்ஃபிக்ஸ் சந்தாவை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா:

விஐ நிறுவனம் ரூ.499, ரூ. 699, ரூ.1,099 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மற்றும் ரூ. 649, ரூ .799, ரூ .999 மற்றும் ரூ .1348 போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு அமேசான் பிரைமுக்கு இலவச ஒரு வருட சந்தாவை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!