TET தேர்வு முடித்தவர்களுக்கு நேரடி பணி நியமனம் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

0
TET தேர்வு முடித்தவர்களுக்கு நேரடி பணி நியமனம் - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
TET தேர்வு முடித்தவர்களுக்கு நேரடி பணி நியமனம் - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
TET தேர்வு முடித்தவர்களுக்கு நேரடி பணி நியமனம் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் TET தகுதித் தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தேர்வானது தகுதித்தேர்வு போட்டித் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பணி நியமனம் குறித்து அரசுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

TET தேர்வு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த டெட் தேர்வானது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கானது மேலும் தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தால் இடைநிலை (D.TED) ஆசிரியர்களுக்கானது இரண்டாம் தாள் பட்டதாரி (BSC., B.ED) ஆசிரியர்கள் பங்கேற்க கூடியது. இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்வை எதிர்நோக்கி விண்ணப்பதாரர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி ‘சந்திரசூட்’ – வெளியான தகவல்!

நடப்பாண்டு தேர்வானது கணினி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது அக்டோபர் மாதம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தகுதித்தேர்வு போட்டித்தேர்வு மற்றும் தகுதித்தேர்வு என்று 2 கட்டமாக தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தகுதித் தேர்வு முடித்தவர்களை எவ்வித போட்டித் தேர்வும் இன்றி நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பாக ஓ. பன்னீர் செல்வம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் போட்டித் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பணி வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!