“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கிய தனுஷ் பட நடிகை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
"குக் வித் கோமாளி சீசன் 3" நிகழ்ச்சியில் களமிறங்கிய தனுஷ் பட நடிகை - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கிய தனுஷ் பட நடிகை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” வருகிற ஞாயிற்று கிழமை முதல் தொடங்க இருக்கும் நிலையில், அதில் சமையல் திறமையை காட்டி வெற்றி பெற புதிய போட்டியாளர்கள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே மக்கள் மனதை கவரும் வகையில் நகைச்சுவை கன்டென்ட்கள் நிறைந்து இருக்கும். அந்த வகையில் மக்களின் ஆதரவை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இது ஒரு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி ஆகும். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளது. முதல் சீசனில் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் நடிகை விஜயலட்சுமியின் அக்கா கனி வெற்றி பெற்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்து பிசியாக இருக்கின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் புகழ் மற்றும் அஸ்வின் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பிரபலமடைந்து இருக்கின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் தொடங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியானது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தனுஷ் நடித்து வெளியாகி தேசிய விருது பெற்ற அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்த அம்மு அபிராமி சமையல் திறமையை காட்ட கலந்து கொள்ள இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் கோமாளியாக சூப்பர் சிங்கர் பரத் மற்றும் நடிகர் கருணாஸ் அவர்களின் மனைவி கிரேஸ் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!