அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி தீவிரம் – பக்தர்களுக்கு அனுமதி!

0
அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி தீவிரம் - பக்தர்களுக்கு அனுமதி!
அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி தீவிரம் - பக்தர்களுக்கு அனுமதி!
அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி தீவிரம் – பக்தர்களுக்கு அனுமதி!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில்:

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் பணிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவில் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இத்தகைய கட்டுமான பணிகளை கவனிக்க ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவில் கட்டுமான பணி மற்றும் கோவில்களை சுற்றி சாலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 40 சதவீத கட்டுமான பணிகளும், 80 சதவீத பீட பணிகளும் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நோய் பரவல் குறைந்து வருவதால் அனைத்து கோவில்களிலும் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் – வழிமுறைகள் வெளியீடு!

அயோத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி நிலைத்து நிற்கும் வகையில் மண்ணில் பிரமாண்ட அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என கோவில் அறக்கட்டளை குழு தெரிவித்துள்ளது. மேலும் கோவிலை சுற்றியுள்ள நிலங்களில் சீதை, லட்சுமணன், விநாயகர், சபரி, ஜடாயு, வால்மீகி ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து புகழ்பெற்ற அனுமன்காரி கோவிலுக்கு செல்லும் பாதை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு முதலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது தாமாகவே முன்வந்து இடங்களை அளித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!