CWC புகழ் சிவாங்கி & மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!

0
CWC புகழ் சிவாங்கி & மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!
CWC புகழ் சிவாங்கி & மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!
CWC புகழ் சிவாங்கி & மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!

குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் சிலர் வரவேற்பை பெற்றனர். அதில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதேபோன்று சிவாங்கியும் வெள்ளித்திரையில் நுழைந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சிவாங்கியும், மணிமேகலையும் விலகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றனர்.

ஷாக் நியூஸ் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி பலருடைய மனக்கவலையை குறைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவினால் தான் இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. தற்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி சுமார் 40 எபிசோடுகளை கடந்திருக்கிறது. இந்த சீசனில் 10 குக்குகள், கோமாளிகள் என பல புதிய முகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இவர்களை தவிர ஸ்ருதிகா, ரோஷினி, தர்ஷன், வித்யூலேகா, முத்துக்குமார், அம்மு அபிராமி என 6 பேர் இந்த ஷோவில் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த வாரம் கிரேஸ் திடீரென எலிமினேட் ஆகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தார். இதை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் டாப் 5 போட்டியாளர் வரிசையில் முதல் ஆளாக ஸ்ருதிகா நுழைந்திருக்கிறார். இதை நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் அறிவித்ததும் ஸ்ருதிகா எக்கச்சக்க குஷியாகி விட்டார். இப்போது கடுமையான போட்டிகளுடன் அடுத்த வாரம் எலிமினேஷன் சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3.

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – 50,000 காலிப்பணியிடங்கள்! ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்!

இந்நிலையில் மணிமேகலை ஹுசைன், சிவாங்கி, ஸ்ருதிகா மற்றும் அவரது கணவர் ஆகியோர் CRUISE TRIP சென்றுள்ளனர். அப்போது அங்கு சென்றதை வீடியோ எடுத்து சிவாங்கி தனது YOUTUBE சேனலில் ஷேர் செய்துள்ளார். அவர்கள் அங்கு செய்யும் லூட்டிகள், சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இதற்கிடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில், சிவாங்கியும் மணிமேகலையும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!