இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – 50,000 காலிப்பணியிடங்கள்! ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்!

0
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - 50,000 காலிப்பணியிடங்கள்! ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்!
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - 50,000 காலிப்பணியிடங்கள்! ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்!
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – 50,000 காலிப்பணியிடங்கள்! ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்!

இந்திய ராணுவத்தின் புதுவித முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டூர் ஆஃப் தி டூட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் வரை பணி மற்றும் அந்த காலத்திற்கு பிறகு அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பணம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராணுவ வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய விரும்புபவர்களுக்கு மத்திய அரசு டூர் ஆஃப் தி டூட்டி அதாவது கடமையின் சுற்றுப்பயணம் என்ற புதிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதாவது, அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் சுமார் 4 ஆண்டுகள் வரை பணியில் இருப்பார்கள். இந்த பணிக்காலம் முடிந்ததும் வரிப்பிடித்தம் இல்லாமல் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்த திட்டத்தின் கீழ் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் இதன் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் 4 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும். அதற்கு பிறகு இந்த வீரர்களில் 25 சதவீதம் பேர் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போது வரை இந்திய ராணுவத்தில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை பணிக்காலம் இருப்பதால், அதற்கும் குறைவான காலத்தில் வீரர்களை நியமிப்பதன் மூலம் செலவினங்கள் குறையும் என்று அரசு கருதுகிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பிரதமர் உறுதி!

இதனால் டூர் ஆஃப் தி டூட்டி திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்புகளை நடத்த மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இந்த நடவடிக்கை நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டூர் ஆஃப் தி டூட்டி திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பணிக்கொடை உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

  • வயது வரம்பு – 17 ½ முதல் 21 வயது வரை
  • பணிக்காலம் – 4 ஆண்டுகள்
  • காலிப்பணியிடங்கள் – 45,000 முதல் 50,000
  • பயிற்சி காலம் – 6 மாதங்கள்
  • சம்பளம் – ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை.
  • பணி ஓய்வு பலன் – ரூ. 10 முதல் 12 லட்சம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!