இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பிரதமர் உறுதி!

0
இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமர் உறுதி!
இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமர் உறுதி!
இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பிரதமர் உறுதி!

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நிமித்தம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் அதிக வேலையின்மை பாதிப்பு அதிகம் காணப்பட்டது. இந்த வேலையின்மை பிணியை போக்குவதற்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

வேலையின்மை

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக 2020 மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிட்டதால், இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சரமாரியாக அதிகமாகியுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்தியாவில் வேலையின்மை கணக்கெடுப்பின் போது, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 7.78 சதவீதமாக இருந்த வேலையின்மை சதவீதம், ஏப்ரல் மாதம் 23.52 சதவீதமாக உயர்ந்துள்ளது என கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆனால், இந்திய மாநிலங்களின் புள்ளிவிவரப்படி, யூனியன் பிரதேசங்களில் இந்த வேலையின்மை மிக அதிகமாக இருக்கிறது. அதாவது, புதுச்சேரியிலும், அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு என்ற தகவல்தான் வியப்புக்குரிய தகவலாக உள்ளது. மேலும், சி.எம்.ஐ.இ புள்ளிவிவரப்படி ஏப்ரல் மாதம் புதுவையின் வேலையின்மை சதவீதம் 75.8, தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 49.8, தேசிய சராசரியான 23.52 சதவீதத்தைவிட இது மிகவும் அதிகமாக உள்ளது. இதே போல் டெல்லியின் வேலையின்மை விகிதம் 16.7 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 20.9 சதவீதம் மற்றும் ஆந்திராவில் 20.5 சதவீதம், கர்நாடகத்தில் 29.8, கேரளாவில் 17, தெலங்கானாவில் 6.2, பிகாரில் 46.6 சதவீதமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி! அமைச்சர் விளக்கம்!

அதன்படி, வேலையின்மை திண்டாட்டம் அதிகமாக பாய்ந்ததால், அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருக்கின்றனர். பிரதமர் மோடி வேலையின்மை பிணியை போக்குவதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுகிறார். மத்திய அரசு பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் நபர்களுக்கு வேலை தருவதாக தெரிவித்திருக்கிறார். அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே அரசு காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், பல்வேறு துறைகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here