IPL 2022: டாப் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை குறிவைத்துள்ள டெல்லி அணி – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IPL 2022: டாப் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை குறிவைத்துள்ள டெல்லி அணி - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: டாப் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை குறிவைத்துள்ள டெல்லி அணி - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: டாப் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை குறிவைத்துள்ள டெல்லி அணி – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்க பேட்ஸ்மேனான ஷிகர் தவானை விடுவித்ததால், ஐபிஎல் 2022 இல் பிரித்வி ஷாவுடன் தொடக்கத்தில் களமிறங்க IPL மெகா ஏலத்தில் முக்கியமாக 3 வீரர்களை குறிவைத்துள்ளது. மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிக தொகைக்கு வீரரை தேர்ந்தெடுக்குக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2022 மெகா ஏலம்:

15 வது IPL சீசனுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த இத்தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகளும் தற்போது இணைந்துள்ளன. இதனால், இந்த இரு அணிகளுக்கும் தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக 15 வது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு தலா 4 வீரர்கள் வரை மட்டுமே தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ யின் அறிவிப்பின் படி 8 அணிகளும் தக்க வைத்துவிட்டன. புதிய இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை தக்க வைத்துள்ளது.

தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு கிடையாது? ஆன்லைன் தேர்வுகள்! அமைச்சர் விளக்கம்!

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை கேப்டனை தேர்வு செய்யாமல் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் கேப்டனை நியமிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதோடு டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்க பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. ஐபிஎல் 2022 இல் பிரித்வி ஷாவுடன் தொடக்கத்தில் களமிறங்க IPL மெகா ஏலத்தில் முக்கியமாக வீரர்களாகிய ஷிக்கர் தவான் , இஷான் கிஷான் , மற்றும் டேவிட் வார்னர் ஆகிய 3 வீரர்களையும் குறிவைத்துள்ளது.

பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் தான் பணி – மாநில காவல்துறை இயக்குநர் அறிவிப்பு!

இதில் 35 வயதான டேவிட் வார்னர் டி20 உலகக் கோப்பையில் 289 ரன்களுடன் மீண்டும் பார்முக்கு திரும்பினார். அதைத் தொடர்ந்து ஆஷஸ் தொடரில் இரண்டு 90-க்கும் அதிகமான ஸ்கோர்கள் உட்பட 273 ரன்கள் எடுத்தார். இதனால் டெல்லி அணி ஏலத்தில் வார்னரை எடுக்க வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஆண்டு மும்பை அணியில் விளையாடிய இஷான் கிஷான் T20 போட்டிகளில் சிறப்பான ஆவரேஜ் வைத்திருப்பதால் அரவும் டெல்லி அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன் டெல்லி அணியில் தொடக்க வீரராக திகழ்ந்த தவானை டெல்லி அணி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!