பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் தான் பணி – மாநில காவல்துறை இயக்குநர் அறிவிப்பு!

0
பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் தான் பணி - மாநில காவல்துறை இயக்குநர் அறிவிப்பு!
பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் தான் பணி - மாநில காவல்துறை இயக்குநர் அறிவிப்பு!
பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் தான் பணி – மாநில காவல்துறை இயக்குநர் அறிவிப்பு!

மராட்டிய மாநிலத்தில் 12 மணி நேரமாக இருந்த பெண் காவலர்களுக்கன பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை காவல் துறை இயக்குநர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்குகள் பிறப்பிக்கட்டு அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்கள் மருத்துவர்களை தொடர்ந்து காவல்துறை இருந்தது. கொரோனா அச்சம் இல்லாமல், இரவு பகல் பாராமல் பொது மக்களை பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை தொடர்ந்து, தற்போது மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் காவல்துறையில் காவலர் பற்றாக்குறை காரணமாக பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் பிப்ரவரி 19 முதல் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தேர்தல் எதிரொலி!

மேலும் மராட்டிய மாநிலத்தில் காவல் துறையில் உள்ள காவலர்கள் பணி நேரம் 12 மணி நேரம் ஆகும். இந்த வகையில் மராட்டியத்தில் பெண் காவலர்கள் பணி நேரம் குறித்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம், 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்ஜய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனவரி 31 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிபர் திடீர் விளக்கம்!

இந்த உத்தரவு பெண்காவலர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அவசர காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் பெண் காவலர்களுக்கன பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்கள் அனுமதியுடன் அதிகரிக்கலாம் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here