தீபாவளிக்கு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – கூடுதல் கட்டணம்! புகார் எண் அறிவிப்பு!

0
தீபாவளிக்கு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு - கூடுதல் கட்டணம்! புகார் எண் அறிவிப்பு!
தீபாவளிக்கு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு - கூடுதல் கட்டணம்! புகார் எண் அறிவிப்பு!
தீபாவளிக்கு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – கூடுதல் கட்டணம்! புகார் எண் அறிவிப்பு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளி ஊர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளார். இந்த நிலையில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொது மக்கள் புகாரளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா எண்:

தமிழகத்தில் வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் பண்டிகை தினங்களில் வரும் விடுமுறைக்கு தங்களின் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர். வெளி இடங்களில் தங்கி வேலை செய்பவர்களும் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட ஊர்களுக்கு செல்வர். இந்த நேரத்தில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். கடந்த மாதம் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகைகளில் மக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

தமிழக மின் நுகர்வோர் கவனத்திற்கு – இணைய வழியில் புகார்கள்! புதிய திட்டம் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து தற்போது நவம்பர் 4 ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழகத்தில் 6,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் கூட்டத்தை வைத்து ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர் என்று புகார் எழுந்து வருகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அரசு அதிர்ச்சி அறிவிப்பு!

அதனால் பண்டிகை காலத்தில் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்களிடம் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும்‌, ஆம்னி தனியார் பேருந்துகளில்‌ அதிக கட்டணம்‌ வசூல்‌ செய்தால்‌ உள்ளிட்ட புகார்களுக்கு 044 24749002 மற்றும் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும்‌ பயணிகள்‌ பேருந்து மற்றும்‌ வழித்தடம்‌ குறித்து அறிய 20 இடங்களில்‌ தகவல்‌ மையங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here