தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.30 கடைசி நாள்!மிஸ் பண்ணாதீங்க!

0
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க டிச.30 கடைசி நாள்!மிஸ் பண்ணாதீங்க!
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க டிச.30 கடைசி நாள்!மிஸ் பண்ணாதீங்க!
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.30 கடைசி நாள்!மிஸ் பண்ணாதீங்க!

தேசிய வீட்டுவசதி வங்கியில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் வேலைவாய்ப்பு

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு இழப்புகளை பொது மக்கள் சந்தித்து வருகின்றன. அதில் குறிப்பாக வேலைகளை இழந்து வருகின்றன. இதனால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு அரசு காலிப்பணியிடங்களை அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது தேசிய வீட்டு வசதி வங்கியில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய வீட்டு வசதி வங்கியில் உதவி மேலாளர், துணை மேலாளர், மண்டல மேலாளர் பணியிடங்களை அறிவித்துள்ளன. அத்துடன் உதவி மேலாளர் பணியிடத்தில் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடத்தில் சேர விரும்புவர்களின் வயது 21 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் 100 ரூபாயை எட்டிய தக்காளி விலை – பொதுமக்கள் அவதி!

இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான முன் அனுபவம் இருந்தால் மிகவும் நல்லது. மேலும் துணை மேலாளர் பணியிடத்தில் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான வயது வரம்பு 23 முதல் 32 வரை உள்ளவராக இருத்தல் வேண்டும். இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு துறையில் பட்டம் மற்றும் MBA படித்து இருத்தல் நல்லது. இந்தியாவில் உள்ள வங்கிகள் அல்லது நிதி சார்ந்த துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் மண்டல மேலாளர் பணியிடத்தில் 1 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கான வயது வரம்பு 30 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

மாநிலம் முழுவதும் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! வதந்திக்கு அரசு விளக்கம்!

இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு துறையில் பட்டம் மற்றும் தொழில்முறை இடர் மேலாண்மை நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் சந்தை நிலவரம் குறித்த நல்ல புரிதலும் பெற்றிருத்தல் வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க www.nrb.rg.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் . மேலும் https://ibpsonline.ibps.in/nhbrosmoct21/ இந்த லிங்கில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இப்பணியாளர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 30-12-2021 அன்று கடைசி நாள் ஆகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற https://nhb.org.in/en/oppurtunities_nhb/recruitment-of-officers-in-various-scales-2021/ என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!