மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப் போவதாக அண்மையில் அறிவிப்பு ஒன்று வெளியானது. தற்போது இது அனைவருக்கும் பொருந்தாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அதன் பிறகு கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த பிறகு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிப்பது பரிசீலிக்கப்பட்டு கடந்த 2021 ஜூலை மாதம் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியானது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! ஏப்ரல் 15 முதல் அமல்!

அதன்படி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் படி 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுகின்றனர். இந்த நிலையில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப் போவதாக தகவல்கள் வந்துள்ளது. 5வது ஊதியக் கமிஷன் மற்றும் 6வது ஊதிய கமிஷன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த அகவிலைப்படி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது உள்ள 368% இலிருந்து 381% ஆக ஜனவரி முதல் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6வது ஊதிய கமிஷன் கீழ் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருவதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!