Daily Current Affairs July 13 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 13 2021 in Tamil
Daily Current Affairs July 13 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தேசிய  நிகழ்வுகள்

நாடு முழுவதும் செப்டம்பர் 12 ம் தேதிநீட்தேர்வு நடைபெறும்

  • நாடுமுழுவதும் செப்டம்பர் 12 ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய மந்திரி தர்மேந்திரபிரதன்  அறிவித்துள்ளார்
  • எம்.பி.பி.எஸ்(MBBS) , பி.டி.எஸ்(BDS) போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு “நீட்” என்னும் நுழைவு தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது

ரத யாத்திரை

  • ரத யாத்திரை மிகப்பெரிய இந்து பண்டிகைகளில் ஒன்றாகும், இது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாத கோவிலில் ரத யாத்திரை கொண்டாடப்படுகிறது.

அகமதாபாத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்களின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பான மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா  திறந்து வைத்தார்.

  • பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது குறித்த மெய்நிகர் பயிற்சியையும் ஸ்ரீ ஷா துவக்கி வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் ஸ்ரீ விஜய் ரூபானி, மாநில உள்துறை அமைச்சர் ஸ்ரீ பிரதீப் சிங் ஜடேஜா, மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ அஜய் பல்லா மற்றும் மத்திய மற்றும் மாநில அரசின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய பொதுப்பணித் துறை தனது புகழ்பெற்ற சேவையின் 167 வது ஆண்டை ஜூலை 12, 2021 அன்று கொண்டாடியது.

  • மத்திய பொதுப்பணித் துறை தனது புகழ்பெற்ற சேவையின் 167 வது ஆண்டை ஜூலை 12, 2021 அன்று கொண்டாடியது இது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் முறையில் நடைபெற்றது
  • இந்நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ துர்காஷங்கர் மிஸ்ரா கலந்து கொண்டார்..

CPWD – Central Public Works Department

மணிப்பூரில் 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி  திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

  • மணிப்பூரில் 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். மொத்தம் 298 கி.மீ நீளமுடையது.
  • இந்த திட்டங்கள் மணிப்பூருக்கு நாட்டின் பிற பகுதிகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் அனைத்து வானிலை இணைப்பையும் வழங்கும்.
  • மேலும் பிராந்தியத்தின் விவசாய, தொழில்துறை மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்கும்.
  • தொலைதூர பகுதிகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அவசரகால சேவையை எளிதாக்கும் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்திய போட்டி ஆணையத்திற்கும் (CCI) ஜப்பான் நியாயமான வர்த்தக ஆணையத்திற்கும் (JFTC) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, போட்டிச் சட்டம் மற்றும் கொள்கை விஷயத்தில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும் இந்திய போட்டி ஆணையம் (CCI) மற்றும் ஜப்பான் நியாயமான வர்த்தக ஆணையம் (JFTC) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. .
  • இந்த ஒப்பந்தம் ஆனது CCI ஐ ஜப்பானில் உள்ள அதன் எதிர் போட்டி நிறுவனத்தின் அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளைப் பின்பற்றவும் கற்றுக்கொள்ளவும் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும்.
  • CCI – Competition Commission of India
  • JFTC – Japan Fair Trade Commission

ஜப்பான்

  • தலைநகரம் : டோக்கியோ
  • பிரதமர்: யோஷிஹைட் சுகா
  • நாணயம்: யென்

நாடாளுமன்ற பயன்பாட்டுக்கு புதிய  செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது

  • 17வது மக்களவையின் 6 வது மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது
  • நாடாளுமன்ற நூலகம் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும் மற்றும் 1845 முதல் முக்கியமான நாடாளுமன்ற விவாதங்கள், அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்படும் என்றும் மேலும் நாடாளுமன்ற நூலகத்தையும் மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை நூலகங்களுடனும் ஒன்றிணைக்கப்படும் என்று மக்களவை தலைவர் ஓம் .பிர்லா கூறி உள்ளார்
மாநில  நிகழ்வுகள்

கட்டாய ஹால்மார்க் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

  • மத்திய அரசு வெளியிட்டுள்ள கட்டாய ஹால்மார்க் திட்டம் 256 மாவட்டங்களில் முதல் கட்டமாக செய்யப்படுத்தப்படவுள்ளது
  • அதிக மாவட்டங்கள் பட்டியலில் தமிழகம்( 24 மாவட்டங்கள் ) முதலிடம் பிடித்துள்ளது
  • இந்தியா தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) 2000 ஆண்டு முதல் ஹால்மார்க் முத்திரை வழங்கி வருகிறது

BIS –  Bureau of Indian Standards

விளையாட்டு

ஒலிம்பிக் ஒரு பார்வை

  • 125 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 9 தங்கம் உட்பட 28 பதக்கங்களை வென்று இருக்கிறது
  • இதில் ஹாக்கியில் மட்டும் 8 தங்கம், 1வெள்ளி , 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை  வென்றுள்ளது.
  • 1928 முதல் 1956 வரை இந்தியா ஹாக்கி அணி தொடர்ச்சியாக 6 முறை தங்கத்தை தனதாக்கி உள்ளது
  • 1980 ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வி பாஸ்கரன் தலைமையிலான இந்தியா ஹாக்கி அணி கடைசியா தங்கப்பதக்கம் வென்றது

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்

  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
  • இந்த ஆண்டு நடைபெற்ற 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இவர்  வென்றுள்ளார்
  • டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல் வீரராக தகுதி பெற்றுள்ளார் .
  • உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு 14 வது முறையாக தகுதி பெற்றிருக்கிறார் .
  • இந்த போட்டி நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கிறது

யூரோ கோப்பை -2020

  • யூரோ கோப்பை லண்டனில் நடைபெற்றது இதில் இத்தாலி அணி வென்றது . பைனலில் ” பெனால்டி ஷூட் அவுட் ” முறையில் இங்கிலாந்தை வீழ்த்தியது .
  • 15 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அரங்கில் இத்தாலி அணி சாதனை படைத்துள்ளது.

ஆட்ட நாயகன்

  • இத்தாலியின் பொனூச்சி தேர்வுசெய்யப்பட்டார்

தொடர் நாயகன்

  • இத்தாலி கோல் கீப்பர் கியான்லுகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

நம்பர் -1 வீரர்

  • போர்த்துக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ  5 கோல் அடித்து  நம்பர் -1 இடம் பெற்றுள்ளார்

சிறந்த இளம் வீரர்

  • ஸ்பெயினின்பெட்ரி இளம் வீரர்  எனும் பட்டத்தை பெற்றுள்ளார்

.சி.சி.யின் (ICCதலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி விலகினார்

  • மனு சாவ்னி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.
  • ஐ.சி.சி வாரியத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
  • ICC – International Cricket Counsil
  • தலைமையகம்: துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  • தலைவர்: கிரெக் பார்க்லே
விருது

தமிழர் தந்தை சி .பா .ஆதித்தனார் விருது

  • தமிழ் மொழியில் நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை போற்றியும் பிறமொழி கலப்பின்றி எழுதியும் , வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வாரஇதழ் மற்றும் மாதஇதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழை தேர்வு செய்து  தமிழர் தந்தை சி .பா .ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக விருது வழங்கப்பட்டு வருகிறது
நியமனம்

நேபாளத்தின் புதிய பிரதமராக செர் பகதூர் நியமனம்

  • நேபாளத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது . இதனை தொடர்ந்து பிரதமை கே.பி.சர்மா ஒளியின் பரிந்துரையின் படி  இரண்டாவது  முறையாக கடந்த

மே-22 ம் தேதி  குடியரசு தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்தார்

  • இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . நீதிபதிகளின் உத்தரவின் பெயரில் நேபாளத்தின் புதிய பிரதமராக செர் பகதூர் நியமிக்கப்பட்டுள்ளார்

ஷியாம் சீனிவாசன் பெடரல் வங்கியின்  தலைமை நிர்வாக அதிகாரியாக  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

  • ஷியாம் சீனிவாசனை பெடரல் வங்கியின் நிர்வாக இயக்குநராக  மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக  மூன்று ஆண்டுகளுக்கு  மீண்டும் நியமிக்க பெடரல் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
  • ஷியாம் சீனிவாசன் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள முன்னணி பன்னாட்டு வங்கிகளுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்
இறப்பு

மோரன் மார் பசெலியோஸ் மார்தோமா பவுலோஸ் II காலமானார்

  • இந்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் உச்ச தலைவரான மோரன் மார் பசெலியோஸ் மார்தோமா பவுலோஸ் II ஜூலை – 12 அன்று காலமானார் .
  • இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்
பொருளாதாரம்

சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு ஒரு பிரத்யேக மின்னணு தளம், .டி.எஃப்.எஸ். (ITFS)

  • சர்வதேச நிதிச் சேவை மையங்களில் (IFSC) நிதி தயாரிப்புகள், நிதி சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) அமைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது
  • சர்வதேச நிதிச் சேவை மையங்களில் (IFSC) வர்த்தக நிதி சேவைகளை வழங்குவதற்காக சர்வதேச வர்த்தக நிதிச் சேவை தளத்தை (ITFS) அமைப்பதற்கும் இயக்குவதற்கும் ஒரு கட்டமைப்பை IFSCA வெளியிட்டுள்ளது.
  • இந்த கட்டமைப்பானது ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பல்வேறு வகையான வர்த்தக நிதி வசதிகளை போட்டி அடிப்படையில் பெற முடியும், அவர்களின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு ஒரு பிரத்யேக மின்னணு தளம், ITFS ஆகும்
  • IFSCA – The International Financial Services Centres Authority
  • ITFSInternational Trade Finance Services platform

மும்பை மெட்ரோ மற்றும் ஆக்சிஸ் வங்கி இணைந்துஒரு மும்பை மெட்ரோ கார்டுஎன்னும் மஸ்டர்கார்டை அறிமுகப்படுத்தவுள்ளது

  • மும்பை மக்களுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக மற்றும் பணமில்லா பயணத்தை உறுதி செய்வதற்காக மும்பை மெட்ரோ மற்றும் ஆக்சிஸ் வங்கி ‘ஒன் மும்பை மெட்ரோ கார்டு’ என்னும் மாஸ்டர்கார்டு,தொடங்குவதாக அறிவித்துள்ளது .
  • இது தினசரி போக்குவரத்து பயணத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படலாம். மேலும்  இந்த அட்டை உணவு, மளிகை சாமான்கள், மருந்துகள் மற்றும் டிக்கெட்டுகளிலிருந்து தினசரி வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.என்றும் கூறப்பட்டுள்ளது

ஆக்ஸிஸ் வங்கி

  • தலைமையகம்: மும்பை
  • MD & CEO: அமிதாப் சவுத்ரி
புத்தகம்

“The Light of Asia: The Poem that Defined the Buddha” என்ற புத்தகத்தை  ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார்

  • “The Light of Asia: The Poem that Defined the Buddha” என்ற புத்தகத்தை ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார்
  • இந்த புத்தகத்தை பெங்குயின் இந்தியா ஹவுஸ் வெளியிட்டது.
முக்கிய தினங்கள்

குச்சி புத்தாண்டு

  • குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த இந்து புத்தாண்டு ஜூலை – 12 அன்று அனுசரிக்கப்படுகிறது
  • இந்த திருவிழா குஜராத்தின் கட்ச் பகுதியில் மழையின் தொடக்கத்தை குறிக்கிறது.

Try Today Current Affairs Quiz

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!