LPG சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைப்பு – ரூ.1907 ஆக நிர்ணயம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி!

0
LPG சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைப்பு - ரூ.1907 ஆக நிர்ணயம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி!
LPG சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைப்பு - ரூ.1907 ஆக நிர்ணயம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி!
LPG சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைப்பு – ரூ.1907 ஆக நிர்ணயம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருளான எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை இதில் பார்க்கலாம்.

சிலிண்டர் விலை குறைவு

கொரோனா காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியது. அதில் குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்தது. இதனை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்க தொடங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் அடிப்படையாக கொண்டு எண்ணை நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பை தீர்மானிக்கின்றனர்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடக்கம்!

அதன்படி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.660க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதத்தில் மீண்டும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்தது. இதையடுத்து அக்டோபர் மாதத்தில் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக அதிகரித்தது. கொரோனா காரணமாக உணவகங்கள் உள்ளிட்ட பல வகையான கடைகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை ஒரே வருடத்தில் அதிகமான விலை உயர்வை பெற்றுள்ளதை வியாபாரிகளுக்கு கூடுதல் செலவீனத்தை ஏற்படுத்துகிறது

CSK கேப்டன் ‘தல’ தோனி உடன் இணைந்த நடிகர் விக்ரம் – திடீர் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்!

ஆனால் நவம்பர் மாதத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் உயர்வு ஏதும் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது. அந்த வகையில் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.91.50 குறைந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1907க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வர்த்தகர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!