வருங்கால மனைவியை அறிமுகம் செய்து வைத்த குக் வித் கோமாளி புகழ் – சிவாங்கி வாழ்த்து!

0
வருங்கால மனைவியை அறிமுகம் செய்து வைத்த குக் வித் கோமாளி புகழ் - சிவாங்கி வாழ்த்து!
வருங்கால மனைவியை அறிமுகம் செய்து வைத்த குக் வித் கோமாளி புகழ் - சிவாங்கி வாழ்த்து!
வருங்கால மனைவியை அறிமுகம் செய்து வைத்த குக் வித் கோமாளி புகழ் – சிவாங்கி வாழ்த்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளியில் பிரபலமான புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பாடகி சிவாங்கி கமெண்ட் செய்துள்ளார்.

குக் வித் கோமாளி புகழ்:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளில் ஒருவர் புகழ். இவர் முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். மேலும் ஆரம்பத்தில் இவர் பெண் வேடமிட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். நடிகர் புகழ் ஆரம்பத்தில் அவரது திறமைக்கு ஏற்ற வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் இவர் ‘குக் வித் கோமாளி’ இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது காமெடி திறமையை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய டைமிங் காமெடி மற்றும் நடிப்பை பார்த்து பலபேர் இவருக்கு ரசிகர்கள் ஆக மாறி விட்டார்கள்.

முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – சீரியலில் ரீஎன்ட்ரி? ரசிகர்கள் கேள்வி!

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புகழுக்காக குக்வித் கோமாளி இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர். இவரின் எண்ணற்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி ஷோ முடிந்த பிறகு விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்தார். அதிலும் அவரது காமெடிக்கு பஞ்சம் இல்லை. மக்களிடம் இவருக்கு கிடைத்ததை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – சீரியலில் ரீஎன்ட்ரி? ரசிகர்கள் கேள்வி!

நடிகர் அஜித்தின் வலிமை, சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படங்களிலும் புகழ் நடித்து வருகிறார். இந்த நிலையில் புகழ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகள் பார்ட்னர் லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பதிவிற்கு பாடகி சிவாங்கி, பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா என பதிலளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் புகழின் காதலியா என்று கேள்வி எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!