முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – சீரியலில் ரீஎன்ட்ரி? ரசிகர்கள் கேள்வி!

0
முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்ட
முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்ட "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா - சீரியலில் ரீஎன்ட்ரி? ரசிகர்கள் கேள்வி!
முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – சீரியலில் ரீஎன்ட்ரி? ரசிகர்கள் கேள்வி!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து விலகிய விஜே தீபிகா, தன்னுடைய முகப்பரு பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார்.

விஜே தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டாப் இடத்தில் இருப்பதால் இந்த சீரியலில் நடிக்கும் சிறிய கதாபாத்திரம் கூட அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே தீபிகா. அவர் சீரியலில் நடித்து வரும் நேரங்களில் கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இருவரின் காதல் காட்சிகளும் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவது எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடப்பது போல இருந்தது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வினுஷாவுடன் இணைந்த ஈரமான ரோஜாவே திரவியம் – வைரலாகும் வீடியோ!

இவர் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி இருந்தார். இந்நிலையில் அவருக்கு அதிகமான முகப்பரு இருந்ததால் அவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சீரியலில் இருந்து விலக முக்கிய காரணமாக இருந்த முகப்பரு பிரச்சனையை சரி செய்ய பல டிரீட்மென்ட் எடுத்தார். அதன் காரணமாக அவருக்கு இப்போது இந்த பிரச்சனை இல்லாமல் அதே அழகுடன் அவர் இருக்கிறார்.

கோலாகலமாக நடக்கும் வருண், சத்யா திருமண வைபோகம் – “மௌன ராகம் 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இதெல்லாம் ஒரு பிரச்சனை என நினைத்து அவர் சீரியலில் இருந்து விலகியதால் அவருடைய ரசிகர்கள் பலர் கொந்தளித்தனர். இந்நிலையில் அவர் இந்த பிரச்சனையில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பது பற்றி தனது யூடுப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய டாக்டர் சொன்னபடி எல்லாம் செய்ததாகவும், மேலும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் சில செய்ததாகவும் 10 மணிக்கு மேல் தூங்காமல் இருந்தால் தன்னுடைய டாக்டர் போன் செய்து தூங்க சொல்வார். அதனால் தான் எனக்கு சுத்தமாக குணமாகி இருக்கிறது என சொல்லி இருக்கிறார். அவர் மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!