‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வினுஷாவுடன் இணைந்த ஈரமான ரோஜாவே திரவியம் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை வினுஷா மற்றும் அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகர் திரவியம் செய்துள்ள நகைச்சுவையான ரீல்ஸ் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
தற்போது பல திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சில முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த சீரியலில் 10 ஆண்டுகள் கழித்து கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ள பாரதி, அவர் மீதான அன்பை வெளிப்படுத்துவது போல வெளியான சில காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைப்பதற்காக இந்த சீரியலில் வாய்தா வடிவுக்கரசி என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அறந்தாங்கி நிஷாவின் காட்சிகளும் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்திருந்தது.
கோலாகலமாக நடக்கும் வருண், சத்யா திருமண வைபோகம் – “மௌன ராகம் 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இப்படி இருக்க தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்த பிறகு சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் பொங்கியுள்ளது. இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா தேவி, அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு ரீல்ஸ் செய்துள்ளார். தவிர இவர்களுடன் இந்த வீடியோவில் ‘ஈரமான ரோஜாவே’ நடிகர் திரவியமும் இணைந்திருக்கிறார்.
பாரதியிடம் உண்மையை சொல்லும் வருண் மற்றும் துர்கா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதாவது ‘அரசு’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தனக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்ததாக சொல்லும் நகைச்சுவை காட்சியை இவர்கள் மூவரும் சேர்ந்து ரீ கிரியேட் செய்துள்ளனர். இதில் ‘ஈரமான ரோஜாவே’ சீசன் 2 நடிகர் திரவியம் வடிவேலுவாக மாறி வசனங்களை பேச இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் திரவியம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க இருக்கிறாரா என்றும் சிலர் வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.