நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –19, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –19, 2019

தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தின்  நான்கு புதிய நீதிபதிகள்
  • நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கிருஷ்ணா முராரி, எஸ்.ரவீந்திரபட் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக செப்டம்பர் 18 அன்று மத்திய அரசு அறிவித்தது .
  • 2019 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கையின் ) மசோதா சட்டமாக அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற எண்ணிக்கையை 31 லிருந்து 34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆந்திராவின் நெல்லூரில் NIOT இன் கடல் முன்னணி ஆராய்ச்சி வசதி
  • இந்தியாவின் துணைத் தலைவர் ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு, மத்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தனிடம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள துபிலிபல்லம் கிராமத்தில் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு(NIOT) ஒரு புதிய ஆராய்ச்சி வசதி அமைப்பதை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
  • முன்மொழியப்பட்ட வசதி நிகழ்நேர முன்மாதிரி சோதனை, அளவுத்திருத்தம், சோதனைகள் மற்றும் கடலில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை நிரூபித்தல், உள்நாட்டில் தயார்செய்யப்பட்ட அமைப்புகளின் சரிபார்ப்பு, கடலோரத்தில் ஆய்வகங்களை நிறுவுதல் மற்றும் சோதனை வசதிகளை கொண்டுள்ளது.

தமிழ்நாடு

2 வது மலர் திருவிழா
  • அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையின் போது , ஆண்டின் இரண்டாவது மலர் திருவிழா  தமிழ்நாட்டில் உதகமண்டலம் – ஊட்டியில் நடைபெறவுள்ளது.
  • வண்ணமயமான மலர்களின் விரிவான கண்காட்சியின் தயாரிப்பு பணிகள் உதகமண்டலத்தில் உள்ள பிரபலமான தாவரவியல் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளன.

அருணாச்சல பிரதேசம்

விஜயநகர் மேம்பட்ட லேண்டிங் மைதானத்தில் மீண்டும் ஓடுபாதை திறக்கப்பட்டது
  • அருணாச்சல பிரதேசத்தில், கிழக்கு விமான கட்டளைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர் டி மாத்தூர் மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி இணைந்து சாங்லாங் மாவட்டத்தில் உள்ள  விஜயநகர் மேம்பட்ட தரையிறங்கும் மைதானத்தில் மாற்றி அமைக்கப்பட்ட ஓடுபாதையைத் திறந்து வைத்தனர்.
  • இந்த ஓடு பாதை மியான்மருடனான எல்லைகளை திறம்பட நிர்வகிக்கவும், மேலும் விஜயநகர் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கைகளை தொடங்கவும் உதவியாக இருக்கும்.

சர்வதேச செய்திகள்

புதிய நாடுகளுக்கு சர்வதேச அதிவேக தபால் 
  • போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பிரேசில், ஈக்வடார், கஜகஸ்தான், லிதுவேனியா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச அதிவேக தபால் (இ.எம்.எஸ்) சேவையைத் தொடங்குவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
  • இ.எம்.எஸ் அல்லது எக்ஸ்பிரஸ் மெயில் சேவை என்பது ஒரு பிரீமியம் சேவையாகும், இது அதன் பயனர்களுக்கு ஆவணங்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்ப உதவுகிறது மற்றும் ஆவணங்கள் மற்றும் பொருட்களை இணையத்தில் கண்காணிக்க கூடுதல் வசதியும் இதில் மேற்கொள்ள பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கான ஈ.எம்.எஸ் சேவை இனிமேல் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்களில் பெற முடியும்
38 வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி
  • ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியின் (எஸ்ஐபிஎஃப்) 38 வது பதிப்பு இந்த ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 9 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
  • உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், மற்றும் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

செயலி & இனைய போர்டல்

அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரத்தின் கீழ் எம்ஐஎஸ் போர்ட்டல்
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் திணைக்களம் அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரத்தின் (Accessible India Campaign) பங்குதாரர்களுக்காக ஒரு மேலாண்மை தகவல் அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • எம்.ஐ.எஸ் போர்டல் அனைத்து நோடல் அமைச்சகங்களையும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏ.ஐ.சியின் ஒவ்வொரு இலக்குக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், மேலும் டிஜிட்டல் தளங்களில் அனைத்து செயல்பாடுகளையும் பராமரிக்கவும், நிகழ்நேரத்தில் தரவைப் சேகரிக்கவும் போர்டல் பயனுள்ளதாக இருக்கும்.

மாநாடுகள் 

WAWE உச்சி மாநாடு 2019
  • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ) பல திட்டங்களை  புதுதில்லியில் தொடங்கினார்.
  • அதில் ஓன்றான WAWE உச்சி மாநாடு 2019 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். இது ஜெய்ப்பூரில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மற்றும் கழிவு மேலாண்மை நிறுவனம் (IIWM) இணைந்து நடத்தும் மாநாடு ஆகும்.
தேசிய நீர் அருங்காட்சியகத்திற்கான சர்வதேச ஒர்க்ஷாப்
  • ஜல் சக்தி அமைச்சகம், 2019, செப்டம்பர் 19 – 20 ஆகிய தேதிகளில்,தேசிய நீர் அருங்காட்சியகத்திற்கான சர்வதேச ஒர்க்ஷாப் ஒன்றை புது தில்லியில் உள்ள  ஆர் கே புரம், புதிய நூலகக் கட்டடம், மத்திய நீர் ஆணைய ஆடிட்டோரியத்தில்,  ஏற்பாடு செய்துள்ளது .
  • பொது மக்களிடையே நீர்வளம் குறைந்து வருவது மற்றும் அதை பாதுகாப்பதற்கான தேவை மற்றும் நீர்வளங்களின் நிலையான மற்றும் நியாயமான பயன்பாடு பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஜல் சக்தி அமைச்சின் கீழ், DoWR, RD & GR, துறை தேசிய நீர் அருங்காட்சியகத்தை உருவாக்க ஒரு முயற்சியை எடுத்துள்ளது.
ஐ.ஏ.இ.ஏ இன் 63 வது பொது மாநாடு
  • சர்வதேச அணுசக்தி அமைப்பின் 63 வது பொது மாநாடு 2019  செப்டம்பர் 16 -20 ஆகிய தேதிகளில் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது . அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தி துறையின் செயலாளருமான டாக்டர் கே.என். வியாஸ், இந்திய அரசு மற்றும் மாநாட்டிற்கான இந்திய தூதுக்குழுவின்  தலைவர் ஆவார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

திறன் இந்தியா மற்றும் ஐபிஎம் இடையே ஒப்பந்தம்
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் பயிற்சி இயக்குநரகம் (டிஜிடி), உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இதன் மூலம் பயிற்சியாளர்களுக்கு அடிப்படை செயற்கை நுண்ணறிவு திறன்களில் நாடு தழுவிய பயிற்சியை ஐபிஎம் வழங்கவுள்ளது .
  • திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.டி.ஐ பயிற்சியாளர்களுக்கு அவர்களின் அன்றாட பயிற்சி நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை செயற்கை நுண்ணறிவு (AI) திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பாதுகாப்பு செய்திகள்

வெளிநாட்டில் உள்ள ஒரு இந்திய பணியில் இராணுவ தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி
  • அஞ்சலி சிங் வெளிநாட்டில் உள்ள ஒரு இந்திய பணியில் இராணுவ தூதராக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பெண் அதிகாரி. இவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் துணை கடற்படை தூதராக பொறுப்பேற்றுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

வினேஷ் போகாட் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் ஆனார்
  • கஜகஸ்தானின் நூர் சுல்தானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க சாரா ஹில்டெபிராண்ட்டை வீழ்த்தியதன் மூலம்  இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர் வினேஷ் போகாட் 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் தனது இடத்தைப் பெற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.
AIBA உலக ஆண்கள் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டு பதக்கங்களை உறுதி செய்தது
  • ரஷ்யாவின் எக்டெரின்பர்க்கில் நடந்த மார்க்யூ நிகழ்வின் அரையிறுதிக்கு அமித் பங்கல் மற்றும் மனிஷ் கவுசிக் ஆகிய இரண்டு இந்தியர்கள் நுழைந்ததை அடுத்து, AIBA உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டு பதக்கங்களை உறுதி செய்துள்ளது.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!