நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 10, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 10, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

தேசிய செய்திகள்

மத்தியப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம் விரைவில் தனது சொந்த விதைகளை உற்பத்தி செய்யவுள்ளது
  • மத்திய பிரதேசத்தில், சான்றளிக்கப்பட்ட மற்றும் உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதுடன், மத்திய பிரதேச மாநில கூட்டுறவு விதைக்கூட்டமைப்பு விதைகளை உற்பத்தி செய்யவும் உள்ளது . விதைகளின் பிராண்ட் பெயர் ‘சா-பீஜ்’ ஆகும் . அடுத்த ராபி பயிர் பருவத்திலிருந்து விதைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
அசாம்
சிறை கைதிகளுக்கு போங்கைகானில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் தொடங்கியது
  • அசாமில், சிறைக் கைதிகளுக்காக போங்கைகான் மாவட்டத்தில் மூன்று மாத திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தில் பலனளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முக்கிய குறிக்கோளைத் தவிர்த்து, கைதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களின் வேலைவாய்ப்பு திறனை இந்தப்பயிற்சி திட்டம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

இடம்பெயர்ந்தவர்களுக்காக முன் கட்டப்பட்ட வீடுகளை  இந்தியா மியான்மரிடம்  ஒப்படைப்பு.
  • இடம்பெயர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக மௌங்கிடாவ்வில்     முன் கட்டப்பட்ட 250 வீடுகளை  இந்தியா மியான்மரிடம்  ஒப்படைத்தது .இந்தியா தனது ராகைன் மாநில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சகம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இத்திட்டம் 25 மில்லியன் செலவில் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – தைவானுக்கு இடையே  2.2 பில்லியன் ஆயுத விற்பனையக்கு  அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்.
  • 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுதங்களில் ஆப்ராம்ஸ் டாங்கிகள் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் இருந்தன என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஆயுத விற்பனையை உடனடியாக ரத்து செய்யுமாறு சீனா வாஷிங்டனை வலியுறுத்திவருகிறது.
ஐ.நா.வின் புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி தெற்கு சூடானில் அமைதி காக்கும் படையினரை ஊக்குவித்தார்
  • தெற்கு சூடானில் ஐ.நா.வின் புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினாய்கர் சமீபத்தில் ஜூபாவில் பொறுப்பேற்றுள்ளார். தினாய்கர் மே மாதம்  ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் ஆல் நியமனம் செய்யப்பட்டார்.தளபதியாக பொறுப்பு  ஏற்றுக்கொண்ட பிறகு, படைத் தளபதி அமைதி காக்கும் படையினரை சந்தித்தார்.  பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் சிரமங்களை சமாளித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அவர்களை ஊக்குவித்தார்..

மாநாடுகள்

இரண்டாவது இந்தியா-ரஷ்யா மூலோபாய பொருளாதார உரையாடல்
  • இரண்டாவது இந்தியா-ரஷ்யா மூலோபாய பொருளாதார உரையாடல் (ஐஆர்எஸ்இடி) ஜூலை 10 அன்று புதுதில்லியில் நடைபெறும். ஐ.ஆர்.எஸ்.இ.டி யின் இரண்டாவது கூட்டம் ஆறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது, அதாவது போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி;வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சி; சிறு மற்றும் நடுத்தர வணிக ஆதரவு; டிஜிட்டல் மாற்றம் மற்றும் எல்லைப்புற தொழில்நுட்பங்கள்; வர்த்தகம், வங்கி, நிதி மற்றும் தொழில்துறையில் ஒத்துழைப்பு; சுற்றுலா மற்றும் இணைப்பு.
இந்தியா – ஆசியன் ட்ரோய்கா வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்
  • இந்தியா – ஆசியான் ட்ரோய்கா வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வரும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்.சி.இ.பி.) குறித்து முறைசாரா ஆலோசனைக்காக புதுடில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய பியூஷ் கோயல், இந்தியா ஆர்.சி.இ.பியை தனது கிழக்குக் கொள்கையின் தர்க்கரீதியான நீட்டிப்பாகப் பார்க்கிறது, மேலும் இது முழு பிராந்தியத்திற்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் என்சிபி மற்றும் மியான்மரின் சிசிடிஏசி இடையே 4 வது இயக்குநர் பொது நிலை பேச்சுக்கள்
  • இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கும் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டுப்பாட்டு மையக் குழு (சிசிடிஏசி) மியான்மர் இடையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து 4 வது இயக்குநர் பொது நிலை பேச்சு புதுடெல்லியில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க 2019 ஜூலை 9 முதல் 10 வரை இரு நாள் இருதரப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செய்திகள்

இரண்டு புதிய ஹெவி-லிப்ட் சினூக் ஹெலிகாப்டர்கள் இந்திய விமான படைக்காக  குஜராத்திற்கு வரவுள்ளன
  • குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு இந்திய விமானப்படைக்காக  இரண்டு புதிய ஹெவி-லிப்ட் சினூக் ஹெலிகாப்டர்கள் வரவுள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான போயிங் அறிவித்துள்ளது.
  • இந்திய விமானப்படை 15 சினூக் ஹெலிகாப்டர்களை வாங்க உத்தரவிட்டுள்ளது, முதல் நான்கு ஹெலிகாப்டர்கள் பிப்ரவரியில் வந்தன.2015 ஆம் ஆண்டில் இந்திய விமான படை 22 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கும் சேர்த்து இந்த உத்தரவை வழங்கியது. போயிங் இந்தியா கூறுகையில், மேம்பட்ட மல்டி-மிஷன் ஹெலிகாப்டர் ஆயுதப்படைகளுக்கு ஈடு இணையற்ற மூலோபாய விமான திறனை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்
  • சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் தொடக்க நாளில் முன்னாள் உலக சாம்பியனான மீராபாய் சானு தங்கம் வென்றார்.சீனியர், ஜூனியர் மற்றும் இளைஞர் பிரிவுகளில் எட்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள் என்று மொத்தம்  13 பதக்கங்களை இந்திய அணி வென்றது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10 , 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!