நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 06, 2019
TNPSC Group 4 OnlineTest
Series 2019
முக்கியமான நாட்கள்
ஜூலை 06 – சர்வதேச கூட்டுறவு தினம்
- சர்வதேச கூட்டுறவு தினம் என்பது கூட்டுறவு இயக்கத்தின் வருடாந்திர கொண்டாட்டமாகும், இது 1923 முதல் ஜூலை முதல் சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் கூட்டுறவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். 2019 தீம் : COOPS 4 DECENT WORK.
தேசிய செய்திகள்
‘சமூகத்தை உணரவைக்க’ காந்திபீடியா
- காந்தியத்தின் ஆக்கப்பூர்வமான மாண்புகள் குறித்து இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய கவுன்சில் காந்திபீடியா உருவாக்கப்படவுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2019-2020 பட்ஜெட்டில் தனது உரையில் தெரிவித்தார். காந்தியின் 150 வது பிறந்த நாளை அரசாங்கம் ஆண்டு முழுவதும் பல திட்டங்களுடன் குறிக்கும் நிலையில், அவரது நன்மதிப்புகளை பரப்புவதற்கான முயற்சிகளில் “காந்திபீடியா” பயன்தரும் என்று அரசு தெரிவித்தது.
சர்வதேச செய்திகள்
இந்தியாவின் முசோரியில் 1800 வங்கதேச அரசு ஊழியர்களுக்கு பயிற்சி
- ஆயிரத்து எண்ணூறு வங்கதேச அரசு ஊழியர்களுக்கு 2019-2025 க்கு இடையில் முசோரியில் உள்ள தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் (என்.சி.ஜி.ஜி) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தியா-வங்கதேச கூட்டு ஆலோசனை ஆணையத்தின் (ஜே.சி.சி) ஐந்தாவது கூட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கதேச அரசு ஊழியர்களுக்கு தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை
- உலகின் மிகப்பெரிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனை வங்கதேசத்தின் டாக்காவில் செயல்படத் தொடங்கியது. ஷேக் ஹசீனா தேசிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 50 படுக்கையறைகள் மற்றும் 12 ஆபரேஷன் தியேட்டர்களைக் கொண்ட 500 படுக்கைகள் கொண்டுள்ளது. தீக்காயத்தால் பாதிக்கப்படும் வங்கதேச நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை மேம்பட்ட சிகிச்சையளிக்க உதவும்.
அறிவியல் செய்திகள்
இந்திய விண்வெளியின் வர்த்தக திறனை அதிகரிக்க, புதிய இந்திய விண்வெளி நிறுவனம் அமைப்பு
- விண்வெளி துறையின் புதிய வர்த்தக நிறுவனமாக புதிய விண்வெளி இந்தியா நிறுவனம் விண்வெளித் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஐ.எஸ்.ஆர்.ஒ மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் மேம்பாடுகளின் பலன்களை உபயோகிக்கும் வகையில், விண்வெளி துறையின் புதிய வர்த்தக கிளையாக புதிய இந்திய விண்வெளி நிறுவனம் என்ற பொது துறை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், செயற்கைக்கோள் செலுத்து வாகனம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் விண்வெளி பொருட்கள் சந்தைபடுத்துதல் போன்ற பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
வணிகம் & பொருளாதாரம்
பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது பட்ஜெட்
- அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை பற்றி எடுத்துரைத்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களும் சேவைகளும் தற்போது விரைவுபடுத்தப்படும் என்றும், செயல்முறைகள் எளிமையாக்கம், செயல் திறனுக்கான ஊக்கத்தொகை மற்றும் சிறந்த தொழில்நுட்ப பயன்பாட்டால் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
- ஒவ்வொரு துறைக்கும் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் ஐந்தாண்டு இலக்கை மனதில் கொண்டு 2019-20 மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கிராமப்புற முன்முயற்சிகள் மற்றும் நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்வதற்கான திட்டம் அவர்களுக்கு கடன் வழங்குவதை எளிதாக்க உதவும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) இந்திய வங்கி முறையின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் என்.பி.எஃப்.சி நிதியுதவிக்கு அரசாங்கம் ஒரு விரிவான அணுகுமுறையை பின்பற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
நியமனங்கள்
இடைக்கால சிபிஐ தலைவர் தீயணைப்பு சேவை பிரிவிற்கு மாற்றப்பட்டார்
- கடந்த ஆண்டு சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு பதிலாக இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர் ராவ், தற்போது தீயணைப்பு சேவை பிரிவு, சிவில் சர்வீசஸ் மற்றும் ஹோம் கார்டுகளுக்கான பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திட்டங்கள்
பிரதமர் மத்சய சம்பதா திட்டம்
- மீன்வள மேலாண்மை கட்டமைப்பு, மீன்வளத் துறை வாயிலாக அமைக்கப்படும் – உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கல், உற்பத்தி, உற்பத்தித் திறன், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கலான இடைவெளிகளுக்கு இந்த பிரதமர் மத்சய சம்பதா திட்டம் மூலம் தீர்வு காணப்படும்.
பாதுகாப்பு செய்திகள்
கார்கில் அஞ்சலி பாடல்
- இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸின் 20வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடும் நிலையில், புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஒரு பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1999 கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களை கவுரவிக்கவும், வீர வணக்கம் செலுத்தவும் கார்கில் அஞ்சலி பாடல் ஒன்றை இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெளியிட்டார். இந்தப்பாடலை புகழ்பெற்ற இந்தி பாடலாசிரியர் திரு சமீர் அஞ்சான் இசையமைத்துள்ளார், திரு சதாத்ரு கபீர் பாடியுள்ளார், திரு ராஜு சிங் இசையமைத்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் IV
- பெர்லினில் நடைபெறும் வில்வித்தை போட்டியில், இந்தியாவின் அதுல் வர்மா மற்றும் லைஷ்ராம் பம்பாய்லா தேவி கலப்பு இரட்டையர்கள் பிரிவில் வெண்கல பதக்கச்சுற்றிற்கு தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள இந்திய ஜோடி அரையிறுதியில் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, இதனால் ஏழாம் இடத்தில் உள்ள இத்தாலி இணையுடன் வெண்கல பதக்கதிற்கான போட்டியில் மோதவுள்ளது.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 06, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்