நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 07, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 07 2019

தேசிய செய்திகள்

மத்தியப் பிரதேசம்

பழங்குடி மாவட்டங்களில் பண்டைய பழங்குடி மொழியான கோண்டி கற்பிக்கப்பட உள்ளது

  • மாநிலத்தின் பழங்குடியினர் ஆதிக்கம் கொண்ட மாவட்டங்களின் முதன்மை கல்வி பாடத்திட்டத்தில் கோண்டி மொழியை சேர்க்க மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் முடிவு செய்துள்ளார்.

ஜம்மு & காஷ்மீர்

10 நாள் தொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டம் கார்கிலில் முடிவடைந்தது

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (JKREGP) கீழ் வளரும் தொழில் முனைவோருக்கான பத்து நாள் தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் (EDP) கார்கில் மொழி மையத்தில் முடிவடைந்தது.

புது தில்லி

பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்த உகந்த நாணயங்களை வெளியிட்டார்

  • பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நாணயங்களின் புதிய தொடரை புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார். புதிய தொடரின் ஒரு பகுதியாக ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய மதிப்பிலான நாணயங்கள் வெளியிடப்பட்டன.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம்

  • கேங்டாக், நமச்சி, பசிகாட், இட்டாநகர் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களை இந்தியா முழுவதும் நிறுவும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1, 2019 தேதிப்படி, ஏற்கனவே இம்மையங்கள் 15 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படத் தொடங்கி விட்டன. இதுதவிர, மேலும் 50 நகரங்களில் மையத்தை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

உத்தராகண்ட்

டூன்முசோரி ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

  • உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் 300 கோடி ரூபாய் மதிப்பிலான டெஹ்ராடூன்-முசோரி ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

சர்வதேச செய்திகள்

மூன்று பில்லியன் இலக்குகளை நோக்கி ஓடும் சீர்திருத்தங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது

  • உலக சுகாதார அமைப்பு (WHO) நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் பரந்த அளவிலான சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது, இந்த அமைப்பை உடல்நலத்திற்கான உலகின் முன்னணி அதிகாரம் வாய்ந்த, திறமையுடன் செயல்படுவதற்கு நவீனமயப்படுத்தவும், வலுப்படுத்தவும் செய்துள்ளது.
  • இந்த உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (UHC) ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பலனளிக்கும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுகாதார அவசரநிலையிலிருந்து பாதுகாக்கப்படுவர்; மேலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நல்ல ஆரோக்கியத்தையும் நலன்களையும் பெறுவர்.

சமாதானம், உறுதிப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஈரானுடன் ஐரோப்பிய ஒன்றியம் தொடரந்து பணிபுரியும்

  • மத்திய கிழக்குப்பகுதி மற்றும் உலகம் முழுவதிலும் சமாதானம், உறுதிப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுடன் தொடர்ந்து செயல்படும். ஈரான் அணுசக்தித் திட்டத்தை சமாதானத்திற்கு பயன்படுத்தும் என உறுதிமொழி அளித்தது, கூட்டு விரிவான அதிரடி திட்டத்திலிருந்து (JCPOA) அமெரிக்கா வெளியேறிய பின் தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடையை 2018 ஆம் ஆண்டில் மறு பரிசீலனைசெய்தது. இது தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையிலிருந்து நிவாரணமாக அமைந்தது.

புதிய சட்டம் ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் ஆன்லைன் ஊடகங்களை தண்டிக்க அனுமதிக்கிறது

  • ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் ஒரு சட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர், இதன் மூலம் அதிகாரிகள் போலி செய்தி எனக்கருதும் செய்திகளை ஆன்லைன் ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை மற்றும் அபராதம் விதிக்க முடியும். ரஷ்யாவின் கீழவை இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது. மரணம் அல்லது கலகம் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளை வெளியிட்ட வலைதளங்களுக்கு நிரந்திரத் தடைவிதிக்கப்படும் மற்றும் 22,700 அமெரிக்க டாலருக்கு மேல் அபராதம் விதிக்கப்படும்.

பிரெக்ஸிட் நிலையின்மை காரணமாக OECD வர்த்தகத்தின் உலக வளர்ச்சி முன்னறிவிப்பு குறைக்கப்பட்டுள்ளது

  • OECD, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு, மீண்டும் 2019 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான விகிதத்தை கணிசமான அளவில் வர்த்தக பதட்டங்கள் மற்றும் பிரெக்ஸிட் நிலையின்மை காரணமாக குறைத்துள்ளது. OECD கடந்த வருடம் நவம்பர் மாதம் கணித்த 3.5 சதவிகிதத்திலிருந்து இந்த ஆண்டு வளர்ச்சிக்கான விகிதத்தை 3.3 சதவிகிதமாக குறைத்துள்ளது. வர்த்தக அழுத்தங்கள் மற்றும் பிரெக்ஸிட் நிலையின்மை, அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவையால் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என எச்சரித்துள்ளது.
  • உலகின் மிக உயர்ந்த வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களைக் கொண்டிருக்கும் OECD, தொழில்மயமான மற்றும் வளர்ந்துவரும் நாடுகளின் G20 குழுவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் வளர்ச்சியின் மதிப்பீட்டை குறைத்து மதிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான விசா கொள்கையை அமெரிக்கா திருத்தியுள்ளது

  • அமெரிக்கா அதிரடியாக ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கிய விசாவை – ஒரு வருடம் மட்டுமே விசா செல்லுபடியாகும் வகையில் பாகிஸ்தானிய குடிமக்களுக்கான விசா கொள்கையை திருத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நபர்கள் பயண அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்காமல் நாட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானும் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு விசாக்களை வழங்குகிறது.

சவூதி அரேபியாவை பணமோசடிப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்தது

  • 28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதர்கள் சவூதி அரேபியாவையும் பிற நாடுகளையும் பணமோசடிப் பட்டியலில் சேர்ப்பதற்கான ஐரோப்பிய ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஒருமனதாக நிராகரித்தது.

வணிகம் & பொருளாதாரம்

2025 ஆம் ஆண்டில் எட்டு துறைகளில் 10 கோடி வேலைகள்

  • 2025ம் ஆண்டுக்குள் எட்டு பிரிவுகளின் பொருளாதாரம் மூலம் மட்டும் 10 கோடி வேலைகள் உருவாக்கப்படலாம் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு [CII] எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகம், கட்டுமானம், போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடையகம், உணவு பதப்படுத்துதல், மற்றும் வாகன பாகங்கள் இவை அனைத்தும் மேலே குறிப்பிட எட்டு பிரிவுகளில் அடங்கும்.

திட்டங்கள்

ஜன் அவ்ஷதி திட்டம்

  • ஜன் அவ்ஷதி திட்டத்தின் கீழ், மலிவான விலையில் தரமான மருந்துகளை அரசாங்கம் வழங்கியுள்ளது, பொது மக்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க அரசு திட்டம்

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, CCEA நாடு முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு ஹைட்ரோ மின்சார திட்டத்திற்கான முதலீட்டிற்கு அமைச்சரவை அனுமதி

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 624 மெகா வாட் கிரு ஹைட்ரோ மின்சார திட்டத்திற்கான முதலீட்டிற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.

வோக்ஸ்வாகன் மீது NGT 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது

  • தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்தியாவில் டீசல் கார்களை ஏமாற்றும் சாதனம் மூலம் சுற்றுச்சூழலை சேதப்படுத்தியதற்காக ஜெர்மன் கார் நிறுவனமான வோக்ஸ்வாகன் மீது 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

இந்தியா, பராகுவே இருதரப்பு முதலீட்டை ஊக்குவிக்க ஒப்புதல்

  • இந்தியா மற்றும் பராகுவே இருதரப்பு முதலீட்டை ஊக்குவிப்பதற்காக பரஸ்பர ஒப்புதலுடன் துறைகளை அடையாளம் காண ஒப்புக்கொண்டதுடன், தகவல் தொடர்புத்துறை, தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் உட்பட புதிய பிரிவுகளில் வளர்ச்சி பெற ஒப்புதல்.

சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க CCEA ஒப்புதல்

  • சர்க்கரை ஆலைகள் 2 ஆயிரத்து 790 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.

1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் தெர்மல் மின் ஆலைக்கு CCEA முதலீடு செய்ய அங்கீகாரம் வழங்கியது

  • 1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் தெர்மல் மின் உற்பத்தி நிலையம் (STPP) உத்தரபிரதேச மாநிலத்தின் புலாந்த்ஷாஹரில் முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, CCEA ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர்களின் பணியிடங்களின் ஒதுக்கீடு) அவசரச் சட்டம், 2019

  • மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர்களின் பணியிடங்களின் ஒதுக்கீடு) அவசரச் சட்டம், 2019 ஆம் ஆண்டிற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசரச் சட்டம் மூலம் அட்டவணையில் உள்ள மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளின் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

தார்த்தி ஆப்

  • வீடு மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்தீப் பூரி இ-தார்த்தி ஆப்-ஐ தொடங்கினார். இதன் மூலம் – மாற்றங்கள், பதிலீட்டு மற்றும் சொத்துக்கள் தொடர்பான திருத்தல் ஆகியவை ஆன்லைனில் செய்யும் வசதி உள்ளது.

தார்த்தி ஜியோ போர்ட்டல்

  • இ-தார்த்தி ஜியோ போர்ட்டல் [e-Dharti GeoPortal], இதன் மூலம் சொத்துக்களின்அடிப்படை விவரங்கள், அதன் இருப்பிடத்தை வரைபடத்துடன் காண முடியும்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!