நடப்பு நிகழ்வுகள் – 3 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 3 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 3 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 3 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் வசிப்பவர்கள்  தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்

 • உலக வங்கி வெளியீட்டுள்ள அறிக்கையில் வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில், 2022ம் ஆண்டிலும், இந்தியர்களே முதலிடத்தை பிடித்துள்ளனர்.
 • 2022-ம் ஆண்டில் இந்தியர்கள் அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட1 லட்சம் கோடி ரூபாயாகும் என்பது தான். வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு பணத்தை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச செய்திகள்

டிசம்பர் மாதத்திற்கான .நா.பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது

 • ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் மாதந்தோறும் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன,2021 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா தலைவராக பதவி வகித்தது.
 • இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா  நேற்று தலைமை பொறுப்பை ஏற்றது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.

 

மாநில செய்திகள்

சில்ஹெட் திருவிழா 2022

 • வடகிழக்கு பிராந்தியத்தின் மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏகே அப்துல் மொமன் ஆகியோர் 2022 டிச. 2 ஆம் தேதி அசாமின் பராக் பள்ளத்தாக்கில் உள்ள சில்சாரில் சில்ஹெட் திருவிழா 2022 ஐத் தொடங்கி வைக்கின்றனர்.
 • இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் அண்டைப் பகுதிகளுக்கு இடையேயான நெருங்கிய கலாச்சார உறவுகளைக் கொண்டாடும் சில்ஹெட்-சில்சார் திருவிழா. தெற்கு அசாமின் சில்ஹெட் மற்றும் பராக் பள்ளத்தாக்கு இடையேயான வரலாற்று பின்னணியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு நினைவரங்கம் அமைப்பு

 • தமிழக எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நினைவரங்கத்தில் நூலகம், நிர்வாக அலுவலகம், மின்னணு நூலகம், கண்காட்சி அறை  ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது
 • மேலும் 1991-ஆம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ‘ஒரு மாவட்டம் ஒரு விளையாட்டு திட்டம்’ தொடங்கப்பட்டது

 • முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் மிகவும் வெற்றிகரமான ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) திட்டத்தின் வரிசையில் ஒரு மாவட்டம் ஒரு விளையாட்டு (ODOS) திட்டத்தை தொடங்கியுள்ளார்.
 • இந்த ODOS திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் 75 மாவட்டங்களில் தலா ஒரு விளையாட்டு அடையாளம் காணப்பட்டு, மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக விளையாட்டு சார்ந்த திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் திட்டமாகும்.

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்  கட்டமைப்பு தணிக்கை கொள்கை செயல்படுத்தப்பட்டது

 • உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் கட்டமைப்பு தணிக்கைக் கொள்கை நொய்டாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது, இதன் கீழ் கட்டடம் கட்டுபவர்கள் பகுதி அல்லது முழு நிறைவுச் சான்றிதழை (CC) பெற கட்டமைப்பு தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
 • கட்டமைப்பு தணிக்கை கொள்கையானது கட்டுமானத்தின் மூன்று முக்கிய குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது அதில் முதல் கட்டிடத்தின் அடித்தளம், இரண்டாவது தளம் மற்றும் பொதுவான பகுதி மற்றும் சுவர்களில் விரிசல் மற்றும் சேதம் இருப்பதை குறித்து ஆராய்கிறது.

 

நியமனங்கள்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி தலைவர் பதவிக்கு முதல்முறையாக கறுப்பின எம்.பி. தேர்வு

 • அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு புதிய தலைவர் பதவிக்கு நடந்த போட்டியில் ஹக்கீம் ஜெப்ரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
 • இதன்மூலம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியை வழிநடத்தும் முதல் கறுப்பினத்தவர் ஆக ஹக்கீம் ஜெப்ரிஸ்(52) தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளார்,மேலும் அவர் 2023-ம் ஆண்டு பொறுப்பேற்கிறார்.

தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வு தலைவர் நியமனம்

 • தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வு தலைவராக (தணிக்கை-1) சி.நெடுஞ்செழியன் டிசம்பர் 1, 2022 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
 • 1996-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், தற்போதைய புதிய பொறுப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள 37 துறைகளில், 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில முதன்மை கணக்காய்வு தலைவராக இருப்பார்.
  • மாநில அரசின் நிதி, வருவாய், சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனம் ஆகியவற்றை தணிக்கை செய்கிறது.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் புதிய செயலாளராக சஞ்சய் குமார் நியமனம்

 • கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் புதிய செயலாளராக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 28 நவம்பர் 2020 முதல் 28 நவம்பர் 2022 வரை பதவியில் இருந்த அனிதா கர்வாலுக்கு பின்னர் பொறுப்பேற்றார்.
 • சஞ்சய் குமார் முன்னதாக இளைஞர் விவகாரங்கள் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார், அவர் பீகாரின் கல்விக்கான முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்தார், மேலும் அவர் 1990 தொகுதியில் ஆம் ஆண்டு IAS (இந்திய நிர்வாக சேவை)பணியை தொடங்கினார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்

 • வங்கியின் செயல் இயக்குநா் பதவிக்கு எம். பரமசிவத்தை கேபினட் நியமனக் குழு நியமித்துள்ளது. இந்த நியமனம் டிச. 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது.
 • வேளாண் பட்டதாரியான எம். பரமசிவம், கனரா வங்கியின் வேளாண்மைப் பிரிவு அலுவலராக 1990-இல் தொடங்கினார். அதன் பிறகு, வங்கித் துறையின் பல்வேறு பிரிவுகளில் அவா் பணியாற்றியுள்ளார்.

இந்திய விளம்பர முகமை சங்கத்தின் (AAAI) இயக்குநர் நியமனம்

 • இந்திய விளம்பர முகமை சங்கத்தின் (AAAI) இயக்குநராக ஸ்லோகா அட்வா்டைசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான கே.ஸ்ரீனிவாசன் தோ்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் விளம்பர செயல்பாடு, சந்தையாக்கல் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
 • 1947-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்திய விளம்பர முகமை சங்கம், விளம்பர தொழில் பிரிவில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான நிறுவனங்களின் உறுப்பினா்கள் உள்ளனா். இது உறுப்பினா்களின் 80 சதவீத பங்குகளுடன் இயங்கி வருகிறது.
 • AAAI-Advertising Agencies Association of India

 

விருதுகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் எண்ம விருதுகள் அறிமுகம்

 • தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் எண்ம (டிஜிட்டல்) விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் விருதுகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அறிமுகம் செய்துள்ளது
 • டிஜிட்டல் அவார்டு மற்றும் டோக்கன் வழங்கும் முறையை உலகில் முதன்முறையாக துபாய் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது,இந்த விருது முதல்முதலாக 15 சிலைகளை பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு வழங்கப்பட்டது.

பேங்கர்ஸ் பேங்க் ஆஃப் தி இயர் (Bankers Bank of the year)விருது 2022

 • உலகளாவிய வங்கி உச்சி மாநாட்டில் இந்தியப் பிரிவினருக்கான “பேங்கர்ஸ் பேங்க் ஆஃப் தி இயர் விருது 2022” ஐப் கனரா வங்கி பெற்றது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 1, 2022 வரை லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எல் வி பிரபாகர் விருதைப் பெற்றார்.
 • இந்த விருது வங்கிகள் கடந்த 12 மாதங்களில் அந்தந்த புவியியல் பகுதிகளில் வருமானம், உத்தி, புதுமை, தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்கான அவர்களின் திறனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

 

விளையாட்டு செய்திகள்

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை போட்டி 2022

 • பார்வையற்றோருக்கான மூன்றாவது T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் டிசம்பர் 5 முதல் 17, 2022 வரை நடைபெறவுள்ளது, அனைத்து நாடுகளிலிருந்தும் சுமார் 150 வீரர்கள் கலந்துகொள்வார்கள் மற்றும் மொத்தம் 24 போட்டிகள் கொண்ட இந்தப் போட்டி இந்தியாவில் ஒன்பது நகரங்களில் நடைபெறுகிறது.
 • உலகக் கோப்பை 2022 இல் பங்கேற்கும் நாடுகள் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா. மேலும் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

 

முக்கிய தினம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

 • டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது, மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தவும், அவர்களின் நல்வாழ்வு, அவர்களின் கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • இன்றைய தினத்தின் கருப்பொருளாக “உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாறும் தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமமான உலகத்தை எரியூட்டிக் கொடுப்பதில் புதுமையின் பங்கு”.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!