நடப்பு நிகழ்வுகள் – 1 ஜனவரி 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 1 ஜனவரி 2023
நடப்பு நிகழ்வுகள் – 1 ஜனவரி 2023

நடப்பு நிகழ்வுகள் – 1 ஜனவரி 2023

தேசிய செய்திகள்

வாகன சார்ஜிங் வசதிக்காக ரூபே கார்டு அறிமுகம்

  • ‘பார்டம் சார்ஜ் மற்றும் டிரைவ்’ என்ற சார்ஜிங் நிலைய நிறுவனம், ‘பைன் லேப்ஸ்’ எனும் நிதி நிறுவனத்துடன் இணைந்து, வாகன சார்ஜிங் வசதிக்காக புதிய ‘ரூபே ப்ரீபெய்ட்’ கார்டை வெளியிட்டுள்ளது.
  • இந்த கார்டை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சார்ஜிங் நிலையங்களிலும், ஜனவரி 1ம் தேதி முதல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் மின்சார வாகன வாடிக்கையாளர்கள், இந்த ப்ரீபெய்ட் கார்டை சார்ஜிங் நிலையங்களில் மட்டுமல்லாமல் மால்கள், கடைகள், உணவகங்கள் என பல்வேறு பொது இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட “Lumpi-ProVac” தடுப்பூசிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

  • ஆடு பாக்ஸ் தடுப்பூசி மற்றும் “Lumpi-ProVac” தடுப்பூசி வணிக ரீதியான தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாக்பூரில் 29 டிசம்பர், 2022 அன்று மத்திய மீன்வளத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதலமைச்சரும், துணை முதல்வருமான ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் கையெழுத்தானது.
  • Lumpi-ProVacind என்பது விலங்குகளின் லம்பி தோல் நோய்க்கு எதிரான நோய்த்தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது, ICAR ஆனது LSDக்கான உள்நாட்டு தடுப்பூசியான Lumpi-ProVac தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

 

மாநில செய்திகள்

தமிழகத்தில் நடமாடும் பணிமனைகள் (Mobile workshops) தொடங்கப்பட்டது 

  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 அரசு நடமாடும் பணிமனைகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

“சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா-2023

  • தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா-2023” ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • முன்னதாக 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது, சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார செய்திகள்

சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் 1.1 % ஆக உயர்வு

  • தேசிய சேமிப்பு சான்றிதழ்கள், தபால் நிலைய வைப்புத் தொகை உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் (3 மாதங்கள்) ஒன்றிய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது.
  • அதன்படி, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில்1 சதவீதம் உயர்த்தப்பபட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
    • தங்கமகள் சேமிப்பு திட்டம், பொது சேமநல நிதி ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

 

நியமனங்கள்

சீனாவில் புதிய வெளியுறவு துறை அமைச்சர் நியமனம்

  • சீனாவின் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய வாங் யி, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பியூரோ) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்,இக்குழுவானது சீனாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா்நிலை அதிகாரக் குழுவாகும்.
  • இதனை அடுத்து தற்போது புதிய வெளியுறவு அமைச்சராக அமெரிக்காவுக்கான அந்நாட்டு தூதராக உள்ள கின் காங் (56) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

  • உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியில் நடந்தது.இதில் ஆண்கள் பிரிவில் நார்வேயின் வீரர் மாக்னஸ் கார்ல்சென்  16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 6-வது முறையாக மகுடம் சூடினார்.
  • இப்போட்டியில் பெண்கள் பிரிவில் கஜகஸ்தானின் பிபிசரா பாலபயேவா 13 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றார், இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி 12.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.ரஷியாவின் ஷுவாலோவா பாலினா 12 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி

  • அகிலேஷ் தாஸ் குப்தா மெமோரியல் அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் பரேய்லியில் டிசம்பர் 23 முதல் 29,2022 வரை நடைபெற்றது, இப்போட்டியில் பெண்கள் பிரிவில் அஷ்மிதா சலிகா வெற்றி பெற்றார்.
  • மேலும் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் ரித்விக் சஞ்ஜீவ் தங்க பதக்கம் வென்றார். 19 வயதான ரித்விக் இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

 

 

இரங்கல் செய்தி

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்

  • முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் காலமானார் மேலும் இவர் பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆன நிலையில் அவர் காலமானார்.
  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்,போப் பதினாறாம் பெனடிக்ட், 1415 ஆம் ஆண்டு கிரிகோரி XII க்குப் பிறகு பதவி விலகும் முதல் போப் ஆவார்.

 

முக்கிய தினம்

உலகளாவிய  குடும்ப  தினம்

  • உலகளாவிய குடும்ப தினம் ஜனவரி 1 அன்று அமைதி மற்றும் பகிர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது.20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக அமைதிக்கான முயற்சிகளின் மூலம் உலகளாவிய குடும்ப தினம் உருவானது.
  • உலகத்தை அனைவரும் வாழ சிறந்த இடமாக மாற்றும் வகையில், பூமி ஒரு உலகளாவிய குடும்பம் என்ற கருத்தைக் கருத்தில் கொண்டும் ஊக்குவிப்பதன் மூலமும் ஒன்றிணைந்து, அமைதிச் செய்தியைப் பரப்புவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

புத்தாண்டு தின கொண்டாட்டம் குறித்த வரலாறு

  • புத்தாண்டு சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. பாபிலோன் ஆட்சிக்காலத்தில்,சம இரவு மற்றும் பகல் வேளைகள் கொண்ட மார்ச் மாதத்தின் உத்தராயண நாளில் இருந்தே புத்தாண்டு பிறந்து வந்துள்ளது.
  • அதன்பின்னர், சூரியனை அடிப்படையாக கொண்டு ரோமன் காலண்டர் உருவாக்கப்பட்டது. இந்த ஜூலியன் காலண்டர், கிட்டத்தட்ட தற்போதைய கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. ரோமானியர்களின் முழுமுதற்கடவுளான ஜானஸை கவுரவிக்கும் விதத்தில், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
    • உலகில் புத்தாண்டை முதலில் வரவேற்கும் இடம் ஓசியானியா. கிரிடிமதி தீவு புத்தாண்டைக் கொண்டாடும் முதல் மக்கள் வசிக்கும் இடமாகும், அங்கு டிசம்பர் 31 அன்று மாலை 3:30 மணிக்கு IST தொடங்குகிறது.
    • அமெரிக்காவிற்கு அருகில் உள்ள ஹவ்லேண்ட் மற்றும் பேக்கர் தீவுகள் மக்கள் வசிக்காத தீவுகள் புத்தாண்டை வரவேற்கும் கடைசி இடங்கள் ஆகும் . அவர்கள் புத்தாண்டில் ஜனவரி 1 ஆம் தேதி மாலை 5:30 IST மணிக்கு கொண்டாடுகிற்றனர்.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!