நடப்பு நிகழ்வுகள் – 17 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 17 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 17 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 17 மே 2023

தேசிய செய்திகள்

கம்போடியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்திய கடற்படை திட்டம்
  • இந்தியா மற்றும் கம்போடியாவுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேம்படுத்த INS தில்லி மற்றும் INS சாத்புரா, ஃபிளாக் ஆபிஸர் கமாண்டிங் ஈஸ்டர்ன் ஃப்ளீட் ஆகியவற்றை கொண்ட இந்திய கப்பற்படையானது மே 14 அன்று கம்போடியாவின்சிஹானூக்வில்லேபுறப்பட்டுச் சென்றுள்ளன.(3 நாள் துறைமுக அழைப்பு)
  • போர்க்கால மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (ஹெச்ஏடிஆர்)” மற்றும் தீயை அணைத்தல் குறித்த பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கழிவு மேலாண்மைக்கான தொழில் முனைவோர் குறித்த பயிற்சித் திட்டம் தொடக்கம்
  • விவசாய மற்றும் தொழில்துறை கழிவு மேலாண்மையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்த ஐந்து நாள் பயிற்சி திட்டத்தை பத்ம பூஷன் டாக்டர்.ஆர் பி சிங் தொடங்கி வைத்துள்ளார்.
  • இத்திட்டம் கழிவு மேலாண்மை தொடர்பான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது குறிப்பாக பாசிகள் ஊட்டச்சத்து நிறைந்த உருவாக்கம், கரும்புத் தொழிற்சாலைக் கழிவுகளை பல்வகைப்பட்ட துறைகளுக்குப் பயன்படுத்துதல், தோட்டக்கலைக் கழிவுகளை கரிம பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துதல் போன்ற முக்கிய கூறுகளை இளைஞர்களிடேயே செலுத்துகின்றன.

8வது அகில இந்திய ஓய்வூதிய அதாலத்தை(Pension Adalat ) மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
  • மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 8வது அகில இந்திய ஓய்வூதிய அதாலத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.ஓய்வூதிய அதாலத் என்பது பல்வேறு இடங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைக்கப்பட்டு அங்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளால் சிக்கலான வழக்குகளை தேர்தெடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும்
  • இதுவரை நடத்தப்பட்ட 7 அகில இந்திய ஓய்வூதிய அதாலத்தில் 24 ஆயிரத்து 218 வழக்குகள் தேர்தெடுக்கப்பட்டு அதில் 17 ஆயிரத்து 235 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.

சர்வதேச செய்திகள்

ஓமனில்வருடாந்திர அறிவியல் திருவிழா” – இந்திய அறிவியல் மன்றம் திட்டம்
  • ஓமானில் அறிவியலை மேம்படுத்துவதற்காக மே 19 மற்றும் 20 ஆம் தேதிகளில், மஸ்கட்டின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகதில் உள்ளஅல் ஹைல்வளாகத்தில் அறிவியல் விழாவை நடத்த இந்திய அறிவியல் மன்றம் (ISF) திட்டமிட்டுள்ளது
  • இந்த நிகழ்வானது மாணவர்களின் அறிவியலுக்கான ஆர்வத்தையும், திறனையும் வெளிப்படுத்த ஒரு சிறந்த தளத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவின்நிலவு மனிதன்என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மாநில செய்திகள்

புவனேஸ்வர் மற்றும் துபாய் இடையே நேரடி விமான சேவை 
  • இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, புவனேஸ்வர் மற்றும் துபாய் இடையே நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது, இது இணைப்பை மேம்படுத்துவதிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என ஒடிசா மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • இந்த விமானத்தின் மூலம் வணிகம் மற்றும் ஓய்வுநேரப் பயணிகளுக்கு புதிய வழிகளைத் திறந்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப மையம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில்  கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • மேலும் ரூ.314 கோடி செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நியமனங்கள்

இந்திய விமானப்படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல்அசுதோஷ் தீட்சித்பதவியேற்பு
  • நர்மேஷ்வர் திவாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய விமானப்படையின் துணைத் தலைவராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் மே 15 அன்று பதவியேற்றுள்ளார்.
  • ஏஸ் போர் விமானியான ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் விமானப்படையின் நவீனமயமாக்கல் மற்றும்  புதிய கொள்முதல்களை சிறப்பாக கையாளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக மனோஜ் சோனி பதவியேற்பு 
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக டாக்டர். மனோஜ் சோனி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆணையத்தின் மூத்த உறுப்பினர் திருமதி.ஸ்மித்தா நாகராஜ் பதவி பிராமணம் செய்து வைத்துள்ளார்.
  • ஜூன் 28, 2017 அன்று ஆணையத்தில் உறுப்பினராக இணைந்த சோனி, ஏப்ரல் 5, 2022 முதல் இந்திய அரசியலமைப்பின் 316(A) பிரிவின் கீழ் UPSC தலைவரின் பணிகளைச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Duroflex தனது நிறுவனத்தின் புதிய தூதராக விராட் கோலியை அறிவித்துள்ளது
  • Duroflex நிறுவனம் அதன் பணியை மேலும் மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை  புதிய நிறுவன தூதராக அறிவித்தது
  • விராட் கோலியின் இந்த ஒத்துழைப்பானது தரமான தூக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையிலான தொடர்பைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வழிவகுக்கிறது.

தொல்லியல் ஆய்வுகள்

பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் மதுரை,திருவாதவூர் அருகே இடையப்பட்டி என்னும் இடத்தில் குலசேகர பாண்டியனின் 43ஆம் ஆண்டு ஆட்சி கல்வெட்டை மதுரை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடுத்துள்ளனர்.
  • கிபி 1311ல் செதுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டில் பிற்கால பாண்டியரான மாறவர்மன் குலசேகர பாண்டியன் 1268ல் ஆட்சி செய்துள்ளார் என்ற 5வரிகள் இடம்பெற்றுள்ளன.

விளையாட்டு செய்திகள்

தாய்லாந்து பாரா பேட்மிண்டன் 2023 – இந்தியாவை சேர்ந்த பிரமோத்துக்கு இரண்டு தங்கம்.
  • தாய்லாந்து பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத் இங்கிலாந்தைச் சேர்ந்தடேனியல் பெத்தேலைதோற்கடித்து தங்கத்தை உறுதிசெய்தார்.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் சுகந்த் கடம் மற்றும் பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

உலக தரவரிசையில் நுழைந்தார் இந்திய பெண் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்
  • அதிதி அசோக் எல்பிஜிஏ நிறுவனர் கோப்பையில் முதல் 5 இடத்தைப் பிடித்த பிறகு, உலகத் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய பெண் கோல்ப் வீரர் ஆனார்.
  • அதிதி சராசரியாக 1.89 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி தற்போது மகளிர் கோல்ஃப் உலக தரவரிசையில் 49வது இடத்தில் உள்ளார்.


முக்கிய தினம்

உலக  உயர் இரத்த அழுத்தம் தினம் 
  • உலகளவில் உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தஉலக உயர் இரத்த அழுத்தம் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று கொண்டாடப்படுகிறது.
  • உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுதல், கட்டுப்படுத்துதல், நீண்ட காலம் வாழ்தல் என்பது 2023 ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

சிக்கிம் மாநில தினம்
  • சிக்கிம் தனது 48வது மாநில தினத்தை கொண்டாடுகிறது.1975 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி,இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக சிக்கிம் இணைந்தது

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!