நடப்பு நிகழ்வுகள் – 15 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 15 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 15 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 15 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

நாட்டில் தங்க கடத்தல் புள்ளி விவரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியீட்டுள்ளது

  • நாட்டிலேயே தங்கக் கடத்தலில் கேரளா முதல் இடம் வகிப்பதாக மத்திய அரசு புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கேரளாவிலுள்ள 4 சர்வதேச விமான நிலையம் வழியாக கடந்த 4 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகளவு கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இப்பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பயோடெக்கிசான் ஹப் திட்டம்

  • பயோடெக்-கிருஷி இன்னோவேஷன் சயின்ஸ் அப்ளிகேஷன் நெட்வொர்க்’ (பயோடெக்-கிசான்) கொண்ட ஐம்பத்தொரு (51) பயோடெக்-கிசான் மையங்களுக்கு நிதியளித்து விவசாயிகளை மையமாகக் கொண்ட  (Biotech-Kisan) மிஷன் திட்டத்தை   பயோடெக்னாலஜி துறை செயல்படுத்துகிறது.
  • அறிவியல் தலையீடு மற்றும் சிறந்த விவசாய முறைகளை உருவாக்குவதன் மூலம் சிறந்த விவசாய உற்பத்திக்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுடன் இணைந்து செயல்படுவதே திட்டத்தின் நோக்கமாகும்.

7வது இந்திய நீர் தாக்க உச்சி மாநாடு 2022

  • ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத் 7வது இந்திய நீர் தாக்க உச்சி மாநாட்டை (IWIS 2022) 2022 டிசம்பர் 15 முதல் 17 வரை புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கி வைக்கிறார்.
  • இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க நீர் மற்றும் சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உத்வேகத்தை வழங்குவதே உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
    • 7வது இந்திய நீர் தாக்க உச்சிமாநாட்டின் (IWIS 2022) கருப்பொருள் ‘ஒரு பெரிய படுகையில் சிறிய நதிகளை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல்.

இந்தியாவில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

  • நாடு முழுவதும் அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது..
  • இப்பட்டியலில் அதிகபட்சமாக 46 சைபர் கிரைம் காவல் நிலையங்களுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 43 சைபர் கிரைம் காவல் நிலையங்களுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • சைபர் குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க gov.in இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

  • தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 7 மே 2021 அன்று பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
  • இந்நிலையில் தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார், அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னையில் இலக்கிய திருவிழா – 2023

  • தமிழகத்தின்‌ தலைநகரமான சென்னையில்‌ இலக்கியத்‌ திருவிழா01.2023 முதல்‌ 08.01.2023 வரை மூன்று நாட்கள்‌ அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது.
  • இவ்விழாவானது இலக்கிய படைப்புகள்‌, பண்பாட்டின்‌ உச்சங்கள்‌ என இலக்கிய வாசகர்களுக்கான அரங்கும்‌, கல்லூரி மாணவர்களை இலக்கியம்‌ நோக்கி வழிநடத்தும் வகையில்‌ சிறந்த ஆளுமைகளின்‌ உரையாடலுடன்‌ கூடிய காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

ஜெய்ப்பூரில் முதல் தோல் தான அறுவை சிகிச்சை நடைபெற்றது

  • இந்தியாவின் முதல் தோல் வங்கி ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் மருத்துவமனையில் ஜூன் 2022 இல் நிறுவப்பட்டது, மேலும் மருத்துவமனை அதன் முதல் தோல் தானம் 14 டிசம்பர் 2022 அன்று நடைபெற்றது.
  • அம் மருத்துவமனையில் 50 வயதான அனிதா கோயல் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவரது உறவினர்கள் தோல் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர், அதன் பிறகு மாநிலத்தின் முதல் தோல் சடல தானம் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஐஸ்கிரீம் தொழிற் சாலை சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது

  • தமிழக ஆவின் நிறுவனத்தின் சார்பில், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர்மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலை26 கோடி ரூபாய் செலவில் அதிநவீன தொழில் நுட்பத்தில் நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் நிறுவப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒய்வு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது

  • தமிழகதில் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்துவதற்கான திட்டத்தை செயல் படுத்தினார்.

 

நியமனங்கள்

இந்திய இருதயவியல் சங்கத்தின் புதிய தலைவர்  தேர்வு

  • ஹைதராபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் பி சி ராத், சென்னையில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்திய இருதயவியல் சங்கம் (CSI) இன் தலைவராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • டாக்டர். பி சி ராத் தற்போது மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணராகவும், அப்பல்லோ மருத்துவமனைகள், ஜூப்ளி ஹில்ஸ் மற்றும் ஹைதராபாத்தில் இருதயவியல் துறையின் தலைவராகவும் உள்ளார்.
  • இந்தியாவில் இருதயநோய் நிபுணர்களின் மிகப்பெரிய சங்கமான கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, அதன் உறுப்பினர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சி.வி.டி மற்றும் இருதய இறப்பைக் குறைப்பதற்காக செயல்படுகிறது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அணுக்கருக்களை இணைப்பதில் விஞ்ஞானிகளின் புதிய சாதனை

  • கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானிகள் அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அணுக்கரு இணைவு மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆராச்சியாளர்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
  • இணைவு ஆராய்ச்சியின் நோக்கம் சூரியனில் ஆற்றல் உருவாக்கப்படும் அணுக்கரு வினையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

 

விருதுகள்

சீல் (Seal) வணிக நிலைத்தன்மை விருது 2022

  • மீன்பிடி வலைகளை அதிக செயல்திறன் கொண்ட, கேலக்ஸி சாதனங்களுக்கான மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களாக மாற்றியதற்காக 2022 ஆம் ஆண்டில் SEAL வணிக நிலைத்தன்மை விருதை Samsung நிறுவனம் வென்றுள்ளது.
  • சீல் வணிக நிலைத்தன்மை விருது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது மற்றும் “நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) நிபுணர்களின் குழுவால்” தீர்மானிக்கப்படுகிறது. இந்த விருதின் முக்கிய நோக்கம் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிப்பதாகும்.

 

விளையாட்டு செய்திகள்

ஜூனியர் உலக கோப்பை வாள் வீச்சு

  • ஜூனியர் பெண்கள் உலக கோப்பை வாள்வீச்சு போட்டி (பாயில்) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது .
  • இப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை ஜாய்ஸ் அஷிதா பங்கேற்கவுள்ளார்.

19வது சர்வதேச ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் – 2022

  • சர்வதேச ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் போட்டியின் 19வது பதிப்பு கொலம்பியாவில் உள்ள பொகோடாவில் டிசம்பர் 2 முதல் 12 வரை நடைபெற்றது, இந்த ஆண்டு IJSO இல் 35 நாடுகளைச் சேர்ந்த 203 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றது.
  • இந்த ஆண்டுக்கான போட்டி முதலில் உக்ரைனின் கிய்வில் நடத்த திட்டமிடப்பட்டது; உக்ரைனில் நடந்த போர் காரணமாக ஆகஸ்ட் 2022 இல் கொலம்பியாவின் பொகோடாவிற்கு மாற்றப்பட்டது.
  • தங்கம் வென்றவர்கள்
    • டெல்லியைச் சேர்ந்த அரித்ரா மல்ஹோத்ரா,
    • ஜாம்நகரைச் சேர்ந்த ராஜ்தீப் மிஸ்ரா,
    • டேராடூனில் இருந்து அவனீஷ் பன்சால்,
    • கோட்டாவிலிருந்து வாசு விஜய்,
    • ஜல்கானில் இருந்து தேவேஷ் பங்கஜ் பாய்யா மற்றும்
    • ஐதராபாத்தை சேர்ந்த பனிப்ரதா மஜீ.

 

முக்கிய தினம்

சர்வதேச தேயிலை தினம் 2022

  • ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது, ஆனால் இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்களாதேஷ், கென்யா,மலாவி, மலேசியா, உகாண்டா மற்றும் தான்சானியா போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15 ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச தேயிலை தினம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது உலகளாவிய தேயிலை வர்த்தகத்தின் தாக்கம் குறித்து அரசாங்கங்கள் மற்றும் குடிமக்களின் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!