நடப்பு நிகழ்வுகள் – 11 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 11 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 11 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 11 மே 2023

தேசிய செய்திகள்

51 % உயிருள்ள குழந்தைகள் பிறப்புகள் கொண்ட 10 நாடுகளின் பட்டியலில்இந்தியாமுன்னணி.
 • சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐநாவின் அறிக்கையின்படி, உலகளாவிய தாய்வழி இறப்புகள், பிரசவம் மற்றும் பிறந்த குழந்தைகளின் இறப்புகளில் 60 சதவீதமாகவும் மற்றும் உலகளவில் 51 % உயிருள்ள குழந்தை பிறப்புகள் கொண்ட 10 நாடுகளின் பட்டியலில்இந்தியாமுன்னணியில் உள்ளது.
 • துணைசஹாரா ஆப்பிரிக்க பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் தென் ஆசிய பகுதிகள் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை உள்ளடக்கிய பிராந்தியங்கள் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகமானது  “SAKSHAM” என்ற கற்றல் மேலாண்மை தகவல் வலைதள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • நிலையான சுகாதார மேலாண்மைக்கான மேம்பட்ட அறிவைத் தூண்டுவதற்காக மத்திய சுகாதார அமைச்சகமானது ” SAKSHAM கற்றல் மேலாண்மை தகவல் அமைப்பைசுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தொடங்கி வைத்தார். புது தில்லியின் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம் இந்த தளத்தை உருவாக்கியுள்ளது.
 • SAKSHAM என்பது நமது நாட்டிலுள்ள அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி மற்றும் மருத்துவக் கல்வியை வழங்குவதற்கான ஒரு தளமாகும். சுகாதார வல்லுநர்கள் இதில் வழங்கப்படும் படிப்புகளுக்கு lmis.nihfw.ac.in என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்து, தேவையான பயிற்சியைப் பெற்று மற்றும் போதுமான மதிப்பீட்டு அளவுகோல்களைப் பெற்ற பிறகு சான்றிதழைப் பெறலாம்.

இந்தியாவும் கனடாவும் இணைந்து எதிர்காலத்தில் மேம்பட்ட ஒத்துழைப்பை ஆராய புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.
 • ஒருங்கிணைக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்புகள், தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகிய நடவடிக்கைகள் மூலம்மேம்பட்ட ஒத்துழைப்போடு எதிர்காலத்தில் செயல்படுவதற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆராய இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
 • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கனடா அமைச்சர் மேரி என்ஜி ஆகியோர் இணைந்து மே 8 ஆம் தேதி ஒட்டாவாவில் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஆறாவது இந்தியாகனடா அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சர்வதேச செய்திகள்

ஜிம்பாப்வே அமெரிக்க டாலருக்கு பதிலாகதங்க ஆதரவு டிஜிட்டல் நாணயத்தைஅறிமுகப்படுத்தியுள்ளது.
 • அமெரிக்க டாலரை நம்பியிருப்பதையும், சார்ந்திருப்பதையும் குறைப்பதற்காகதங்க ஆதரவு டிஜிட்டல் நாணயத்தை ஜிம்பாப்வே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • பொருளாதாரத்தில் கிடைக்கும் மதிப்பினைக் காக்கும் கருவிகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த தங்க ஆதரவு டிஜிட்டல் டோக்கன்கள் வழங்கப்படுவதாக ஜிம்பாப்வே அரசாங்கம் கூறியுள்ளது. மக்கள் டிஜிட்டல் டோக்கன்களை பெறுவதற்கான குறைந்தபட்ச செலவினமானது ஒரு தனிநபர் திறனில் $10 ஆக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டரத்தினங்கள் மற்றும் நகைகளை விளம்பரப்படுத்துவதற்காக துபாயில், “ஜூவல்லரி எக்ஸ்போசிஷன் 2023” தொடங்கியுள்ளது.
 • ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சிலானது (GJEPC), துபாயின் முதல் நகை கண்காட்சி மையமான ஜூவல்லரி எக்ஸ்போசிஷன் 2023 (IJEX 2023) இந்தியா தொடங்கியுள்ளது.
 • கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களில் இந்தியா முன்னணியில் உள்ளது மற்றும் உலக நகைகளில் 15 வைரங்களில் 14 இந்தியாவில் பதப்படுத்தப்படுகின்றன, மேலும் இந்த கண்காட்சி உலகளவில் இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் நகைகளின் மதிப்பை உயர்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில செய்திகள்

ஜெகனண்ணகு செபுடம்என்ற அவசரகால அழைப்பு எண்ணை(HELPLINE) ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி தொடங்கியுள்ளார்.
 • தற்போதுள்ளஸ்பந்தனா திட்டத்தைமேம்படுத்தும் முயற்சியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது தாடேபள்ளி அலுவலகத்தில்ஜகனன்னகு செபுதம்” (ஜெகன் அண்ணாவை அணுகுவோம்) என்ற சீரமைக்கப்பட்ட மற்றும் அத்தியவாசியமான குறைகளை தீர்க்கும் முயற்சியாக இதை தொடங்கியுள்ளார்.
 • “1902” என்ற அவசரகால எண்ணானது, “நலத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் சேவைகள்தொடர்பான பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொறுப்பான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் என ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ.2,123 கோடி வட்டியானது தள்ளுபடி வழங்கப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
 • அசல் மற்றும் வட்டி உட்பட ரூபாய் 2 லட்சம் வரை நிலுவைத் தொகை உள்ள விவசாயிகள் மட்டுமே இந்த பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
 • இதன் மூலம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11.19 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்தத் தள்ளுபடி அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வட்டித் தள்ளுபடியானது, விவசாயிகள் தங்கள் காரீஃப் பயிர்களுக்கு உரம் மற்றும் விதைகளை வாங்குவதற்கு அதிகாரமளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அசாமில் 5 மாவட்டங்களில் இருந்து AFSP சட்டத்தை அகற்றும் திட்டத்தை அசாம் முதல்வர் அறிவித்துள்ளார்.
 • இந்த ஆண்டுக்குள் மாநிலத்தின் மீதமுள்ள 5 மாவட்டங்களில் இருந்துஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைநீக்க மாநில அரசு செயல்பட்டு வருவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
 • இந்த நீக்கம் மூலமாக அசாமில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அசாம் முதல்வர்ஆயுஷ்மான் அசோம் கார்டைஅறிமுகப்படுத்துகிறார் மற்றும் இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக அரிசி கொள்முதல் செய்வதால், மாநிலத்தில் விவசாயத் துறையும் மேம்படும் என  முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் “ரோபோட்டிக்ஸ் கட்டமைப்பை” தெலுங்கானா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்தியாவிலேயே முதல்முறையாக தெலுங்கானா அரசாங்கமானது 09மே அன்றுஸ்டேட் ரோபோடிக்ஸ் கட்டமைப்பைஅறிமுகப்படுத்தியுள்ளது.
 • இது ஒரு நிலையான ,மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ரோபாட்டிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும், ரோபாட்டிக்ஸ் துறையில் மாநிலத்தை முன்னிலை படுத்துவதையும்  நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் நாத்வாராவில் பிரதமர் மோடி ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை  தொடங்கி வைத்துள்ளார்.
 • ராஜஸ்தானின் உதய்பூர் ரயில் நிலையத்திற்க்கு மறுவடிவமைப்பு மற்றும் அதை விரிவாக்கும் திட்டம் மற்றும் நட்வாரா வெளியிலிருந்து நட்வாரா நகரத்திற்கு செல்லும் புதிய பாதைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
 • ஷாம்லாஜிக்கு NH-48n உதய்பூரின் 114-கிமீ ஆறு வழிப்பாதை, NH-25 இன் 110-கிமீ பார்பிலாராஜோத்பூர் பகுதியை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் திட்டம், நடைபாதையுடன் கூடிய இரண்டு பாதைகள் உட்பட மேலும் புதிய மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு இந்த தொகையானது பயன்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

தொல்லியல் ஆய்வுகள்
வள்ளியூர் அருகே 2-ம் கட்ட அகழாய்வில் “450-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியின் விளாங்காடு பகுதியில் தற்போது 2ஆம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வின்போது சதுரங்கம் விளையாடுவது போல் சுடுமண்ணால் ஆன காய்கள், செம்பினால் ஆன மோதிரம், சுடுமண்ணால் ஆன காதில் அணியும் ஆபரணம், ஈட்டி முனை, பானை, பாசிகள்,எலும்புகள் மற்றும் பழங்கால கூரைவீடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்பட 450-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • முதற்கட்டமாக நடந்த அகழாய்வு பணிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பழங்கால தொன்மையான ஓடுகள், குவளைகள், பாசிகள் மற்றும் மணிகள் போன்ற பல்வேறு வகையிலான 1,009 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் கோவிந்த் கேலென்ட்ரி விருதுகளை வழங்கினார்.
 • புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றபாதுகாப்பு முதலீட்டு விழா– 2022″ குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 09 மே அன்று கேலண்ட்ரி விருதுகளை வழங்கினார்.
 • ராணுவ தளபதி மனோஜ் பாண்டே அவர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்துபரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தைபெற்றார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்த கேப்டன் அசுதோஷ் குமாருக்கு சௌர்ய சக்ரா விருது(மரணத்திற்குப் பின்) வழங்கப்பட்டதுராஷ்டிரிய ரைபிள்ஸின் ஹவில்தார் அனில் தோமர், ஹவில்தார் பிங்கு குமார், ஹவில்தார் காஷிராய் பம்மனல்லி, நைப் சுபேதார் ஸ்ரீஜித் எம், மற்றும் சிப்பாய் ஜஸ்வந்த் ரெட்டி ஆகியோருக்கு சௌர்ய சக்ரா (மரணத்திற்குப் பின்)வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

லியோனல் மெஸ்ஸிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான  ” லாரஸ் உலக  விளையாட்டு வீரர்விருது வழங்கப்பட்டுள்ளது.
 • பாரிஸில் 08மே அன்று நடைபெற்ற விழாவில் அர்ஜென்டினாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு 2023 ஆம் ஆண்டின்லாரஸ் உலக விளையாட்டு வீரர்விருது வழங்கப்பட்டுள்ளது.
 • கைலியன் எம்பாப்பே, மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோருக்கு முன்னதாக அர்ஜென்டினா சூப்பர்ஸ்டாரான மெஸ்ஸிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது மெஸ்ஸிக்கு இரண்டாவது லாரஸ் விருது என்பது இதில் குறி[பிடத்தக்கது.

முக்கிய தினம்

உலக  லூபஸ் தினம்

 • உலக லூபஸ் தினம் என்பது லூபஸ் நோயிக்கான ஆபத்தான நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 10 ஆம் தேதியன்று நினைவுகூரப்படும் உலகளாவியசுகாதார நிகழ்வுஆகும்.
 • லூபஸ் நோய் என்பது நோயெதிர்ப்பு அமைப்பானது அதன் சொந்த திசுக்களைத் தாக்கும்போது ஏற்படும் அழற்சி நோய் ஆகும்.”லூபஸைக் காணக்கூடியதாக ஆக்குங்கள்” ( “Make Lupus Visible”)என்பது இந்த ஆண்டுக்கான  கருப்பொருளாகும்.

தேசிய தொழில்நுட்ப தினம்.
 • மே 11 ஆம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.
 • பள்ளி முதல் தொடக்கம் வரைபுத்தாக்கம் செய்ய இளம் மனங்களைத் தூண்டுதல்என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!