நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2023

தேசிய செய்திகள்

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில்டாவ்கி லேண்ட் போர்ட்தொடங்கப்பட்டுள்ளது
 • சமீபத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே வர்த்தகம் மற்றும் வர்த்தக போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளடாவ்கி லேண்ட் துறைமுகத்தைமத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் திறந்து வைத்தார்.
 • இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் போக்குவரத்து மையமாக இது செயல்படும் என்றும் இது எல்லையில் பொருட்கள், நபர்கள் மற்றும் வாகனங்கள் செல்வதை எளிதாக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினமானதுமிஷன் லைஃப்என்ற நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது
 • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் அனுசரிக்கப்படுகிறது.இந்த ஆண்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது, சுற்றுச்சூழலுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைக்கக்கூடிய “மிஷன் லைஃப்” என்ற நோக்கத்துடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
 • தேசிய விலங்கியல் பூங்காவுடன் இணைந்து தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகமானது மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகவும், கழிவுகளை குறைப்பதற்கும்(ஸ்வச்சதா செயல்கள்) இந்த மிஷன் லைப் உதவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின்தேசிய தொழிற்பயிற்சி மேளா 2023″ நிகழ்ச்சியானது மே 8 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
 • பயிற்சி மேளாக்கலானது ஆண்டு முழுவதும் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது திங்கட்கிழமையும் நடைபெறும் மற்றும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கத்திலிருந்து குறிப்பிட்ட அளவுகோல்களின்படி மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 • பல்வேறு நிறுவனங்களால் இந்த மேளாவில் பல துறைகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்றும் இந்த மேளா மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் உதவி தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

RBI & BIS ஆகியவை இணைந்துஜி20 டெக் ஸ்ப்ரின்ட்என்ற உலகளாவிய  தொழில்நுட்ப போட்டியை தொடங்கியுள்ளன.

 • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் (BIS) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்துஜி20 தொழில்நுட்ப ஸ்ப்ரின்ட் (Tech Sprint)” என்ற உலகளாவிய தொழில்நுட்ப போட்டியை ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
 • எல்லை தாண்டிய பணம் செலுத்துவதற்கான புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்காக இந்த போட்டியானது நடத்தப்படுகிறது. RBI மற்றும் BIS ஆகிய நிறுவனங்கள் இணைந்து புத்தாக்க உருவாக்கம் என்ற கொள்கையுடன் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது G20 டெக் ஸ்ப்ரின்ட் இன் நான்காவது பதிப்பாகும்.

மாநில செய்திகள்

ரயில் டிக்கெட் பரிசோதர்களுக்கு ஆடை கேமரா பொருத்தும் நடைமுறை முதன்முதலில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • சமீபத்தில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ஒரு பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிகழ்வு மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஒருவர்  கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார் வரும் காரணத்தால் இந்த முறை அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 • இந்த கேமராக்களில் 20 மணி நேரம் காட்சிகளை பதிவு செய்ய முடியும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தகித்துள்ளது.

திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் சர்வதேச தரத்தில்மருத்துவ பூங்காஅமைப்பதற்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
 • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் தொழில்நுட்ப வளாகத்தில் 155 கோடி ரூபாய் மதிப்பீட்டளவில் சர்வதேச தரத்தில் மருத்துவ பூங்கா அமைக்கப்பட உள்ளது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 111 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவ பூங்கா கட்டப்பட உள்ளது.
தெலுங்கானாவில் ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோர்களின் புதுமையை உருவாக்குதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
 • இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களிடையே ஆராய்ச்சி மற்றும் புதுமையான திறன்களை ஊக்குவிக்கும் வகையில், மாணவர் சமுதாயத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை இந்த மையம் ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 • தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்களை ஏற்ப்படுத்த ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது மற்றும் சமூக நலனுக்கான நேரடி திட்டங்களை வடிவமைக்க இந்த மையம் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனம்

இந்தியஅமெரிக்க குடிஉரிமை பெற்றநீரா டாண்டன்அமெரிக்காவின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அவர்களால் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட நபரான இந்தியஅமெரிக்க குடியுரிமை பெற்ற நீரா டாண்டனை உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.
 • இந்த நியமனம் மூலம் வரலாற்றில் எந்த ஒரு உயர்மட்ட வெள்ளை மாளிகை ஆலோசனைக் குழுவிற்கும் தலைமை தாங்கும் முதல் ஆசியஅமெரிக்கர் மற்றும் இந்தியர் என்ற பெருமையை நீரா டாண்டன் பெற்றுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் 2023 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
 • இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டாப்டையர் டிராக் மற்றும் ஃபீல்ட் நிகழ்வுகளின் முதல் தொடரான தோஹாவில் நடைப்பெற்ற டயமண்ட் லீக் போட்டியில்  முதல் இடத்தைப் பிடித்துள்ளார்
 • நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 2022 இல் லொசானில் நடந்த போட்டியிலும், ஸ்விட்சர்லாந்து சூரிச்சில் நடந்த டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தோஹா டயமண்ட் லீக்கில் முதலிடம் பிடித்தது மூன்றாவது முறையாகும்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்.
 • சமீபத்தில் நடைப்பெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில்  பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனைபிந்த்யாராணி தேவிவெள்ளிப் பதக்கம் வென்றார்.
 • கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது, பாரீஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறும் 59 கிலோ எடைப் பிரிவுக்கு பிந்தியாராணி 25வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினம்

உலக  தடகள  தினம் 2023

 • பாலினம், ஈடுபடும் நபர்களின் வயது, அவர்களின் திறன் மற்றும் தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் விளையாட்டுக்கான அணுகலை ஊக்குவிப்பதற்க்காக மே07அன்று இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
 • அனைவருக்கும் தடகளம்ஒரு புதிய ஆரம்பம்என்பது 2023 ஆம் ஆண்டுக்கான உலக தடகள தினத்திற்கான கருப்பொருளாகும். தடகளத்தில் பன்முகத்தன்மை மற்றும் சேர்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

சர்வதேச உணவுக் கட்டுப்பாடு இல்லாத தினம் 2023

 • சமூக அழுத்தங்கள் மற்றும் உண்மையற்ற அழகு தரநிலைகளை நிராகரிப்பதற்காகசர்வதேச உணவுக் கட்டுப்பாடு இல்லாத தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 6 அன்று கொண்டாடப்படுகிறது.
 • உணவுக் கட்டுப்பாட்டைக் காட்டிலும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்களையும் சுய அன்பையும் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!