கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு – ஒரே நாளில் 15,698 பேருக்கு தொற்று உறுதி!

0
கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு - ஒரே நாளில் 15,698 பேருக்கு தொற்று உறுதி!
கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு - ஒரே நாளில் 15,698 பேருக்கு தொற்று உறுதி!
கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு – ஒரே நாளில் 15,698 பேருக்கு தொற்று உறுதி!

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 15,698 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சில வாரமாகவே தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் தொற்றுக்கு ஆளாகி கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனை கட்டுப்படுத்த சீனா சுகாதாரத்துறை பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டது. நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்புகள் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவியது. இந்த வைரஸ் தொற்று சீனாவை தொடர்ந்து அண்டை நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா, இத்தாலி, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் பரவியது.

ExamsDaily Mobile App Download

இந்த நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் அரசு தொழில் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டோம் என்று நினைக்கும் நிலையில் சீனா நகரம் ஷாங்காயில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – உடனே படிங்க!

கடந்த 24 மணி நேரத்தில் 15,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அந்நகரில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி 20,000 பேருக்குக் குறைவில்லாமல் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நிர்வாகம் நீட்டித்துள்ளது. ஆனாலும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் ஷாங்காய் நகர நிர்வாகம் கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here