ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – உடனே படிங்க!

0
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - உடனே படிங்க!
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - உடனே படிங்க!
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – உடனே படிங்க!

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் அட்டை, எதிர்பாராத சமயத்தில் தொலைந்து விட்டால், அட்டைதாரர் என்ன செய்ய வேண்டும், எப்படி நகல் ரேஷன் அட்டை எப்படி பெற வேண்டும் என்பது குறித்த முக்கிய தகவல்களை அரசு வெளியிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் ஆன்லைனில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றி நகல் ரேஷன் அட்டையை எளிதாக பெறுவது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்று மிக மிக முக்கியமான ஆவணமாகும். அதிலும் குறிப்பாக அரசு தரும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இப்படி ஒரு முக்கியமான ஆவணத்தை அப்டேட்டுடன் வைத்திருப்பது மிக மிக அவசியம். அதாவது வீட்டு முகவரி, வயது விவரம், பிழை இல்லாமல் பெயர், பெயரை சேர்த்தல் அல்லது நீக்குதல் என எல்லா அப்டேட்டுக்களையும் தெளிவாக செய்து இருக்க வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை பெற அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் அட்டை சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய அறிவிப்பு!

இதற்கிடையில்,சில நேரங்களில் நமது ரேஷன் கார்டு தொலைந்து விடும் அல்லது திருட்டு போய் விடுகிறது. அப்படிப்பட்ட சமயங்களில் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்போம். ஆனால் தொலைந்த ரேஷன் கார்டை சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நகல் ரேஷன் அட்டையை பெறலாம். மேலும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் நகல் ரேஷன் கார்டை பெறலாம். கையில் செல்போன் இருந்தால் போதும் இதை 20 நிமிடத்தில் இந்த வேலையை செய்து முடிக்கலாம்.

1. முதலில் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் https://www.tnpds.gov.in/ அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. இப்போது நீங்கள் பதிவு செய்துள்ள தொலைப்பேசி எண்ணிற்கு sms மூலம் ஒரு OTP எண் வரும். அதனைக் கொண்டு உங்கள் சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.

3. இப்போது, TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். (இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளும் இருக்கும்)

4. உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

5. உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பொதுமக்கள் 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் தொடர்பு கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!