CSIR CECRI புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Associate பணிகளுக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CSIR CECRI |
பணியின் பெயர் | Project Associate |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 06.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
CECRI வேலைவாய்ப்பு :
Project Associate பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
CSIR கல்வித்தகுதி :
- அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Electrical and Electronics Engineering / Electronics and Communication Engineering / Electronics and Instrumentation Engineering ஆகிய பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
CSIR CECRI ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.24,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை தேர்வு செய்யப்படும் பதிவாளர்களுக்கு சம்பளம் வழங்கபடும்
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Google Meet முறையில் நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 06.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.