ஆகஸ்ட் 13 முதல் CS தேர்வுகள் தொடக்கம் – புதிய அட்டவணை வெளியீடு!!

0
ஆகஸ்ட் 13 முதல் CS தேர்வுகள் தொடக்கம் - புதிய அட்டவணை வெளியீடு!!
ஆகஸ்ட் 13 முதல் CS தேர்வுகள் தொடக்கம் - புதிய அட்டவணை வெளியீடு!!
ஆகஸ்ட் 13 முதல் CS தேர்வுகள் தொடக்கம் – புதிய அட்டவணை வெளியீடு!!

ஐசிஎஸ்ஐ நிறுவனம் நடப்பு ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த சிஎஸ் தேர்வினை ஒத்திவைத்ததை தொடர்ந்து தற்போது தேர்விற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

சிஎஸ்:

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் 2021ம் ஆண்டிற்கான சிஎஸ் தேர்வு கடந்த ஜூன் மாதம் 1 முதல் 10ம் தேதி வரை நடத்த ஐசிஎஸ்ஐ திட்டமிட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிஎஸ் தேர்வுகள் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் 4ம் தேதி அன்று ஐசிஎஸ்ஐ நிறுவனம் அறிவித்தது.

தமிழகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழு – துறைகள் ஒதுக்கீடு!!

இதனால் சிஎஸ் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஐசிஎஸ்ஐ நிறுவனம் சிஎஸ் 2021ம் ஆண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை அறிவித்துள்ளது. சிஎஸ் முதல் நிலை, நிர்வாக திட்டம் (பழைய மற்றும் புதிய பாடத்திட்டம்) மற்றும் தொழித்துறை திட்டம் ஆகிய தேர்வுகளை வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிஎஸ்ஐ அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

புதிய அட்டவணை படி முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) வீதம் 2 நாட்களில் 4 தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் நிர்வாக மற்றும் தொழில்துறை திட்டங்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!