மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9223 Constable காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9223 Constable காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9223 Constable காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9223 Constable காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள Constable (Technical & Tradesmen) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசுப்பணிக்கு என மொத்தம் 9223 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 27.03.2023 முதல் 25.04.2023 வரை வரவேற்கப்படுகின்றன.

CRPF Constable வேலைவாய்ப்பு விவரங்கள்:

Constable (Technical & Tradesmen) பதவிக்கு என மொத்தம் 9223 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒன்றில் 10/12 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் முடித்திருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 Cut Off மதிப்பெண் எவ்வளவு? – முழு விவரம் இதோ!

01-08-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC/ ST/ ESM/ Female விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு (CBT), உடல் திறன் தேர்வு (PET) மற்றும், உடல் தரநிலைத் தேர்வு (PST), திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,700 – 69,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் CRPF ன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று வரும் 25.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!