TNPSC குரூப் 4 Cut Off மதிப்பெண் எவ்வளவு? – முழு விவரம் இதோ!

0
TNPSC குரூப் 4 Cut Off மதிப்பெண் எவ்வளவு? - முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 Cut Off மதிப்பெண் எவ்வளவு? - முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 Cut Off மதிப்பெண் எவ்வளவு? – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் 24.07.2022 அன்று நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இந்த தேர்வை எழுத முடியும் என்பதால், பல லட்சம் பேர் எழுதி உள்ளனர். பல மாதங்களுக்கு பிறகு இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு? அரசுக்கு வலியுறுத்தல்!

இந்த வருடம் குரூப் 4 தேர்வின் மூலம் 10, 117 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தேர்வர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் பின்வருமாறு இருக்கும் என கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164க்கும் மேலும், BC பிரிவினருக்கு 159க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 154க்கு மேலும், BCM பிரிவினருக்கு 152க்கு மேலும், SCA பிரிவினருக்கு 151க்கு மேலும், ST பிரிவினருக்கு 141க்கு மேலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!