ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி – நீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாக இருப்பது ஜல்லிக்கட்டு. இந்த வீர விளையாட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஜல்லிக்கட்டு:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுகள் குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து கொண்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்கு பின்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் சேர்ந்த சேஷன் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால மாடு பிடி வீரர்களுக்கு பிடிக்க ஏதுவாக இருக்கும் என்றும் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் கூறி இருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, தமிழ்நாட்டு கலாச்சார பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து வழக்கினை நான்குக்கு விசாரித்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் கலந்து கொள்ள கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். போட்டியில் பங்கேற்க இருக்கும் மாடு நாட்டு மாடுதான் என்பதற்கு கால்நடை மருத்துவர் சான்றளித்திருக்க வேண்டும். போலி சான்றிதழ்கள் பெற்று போட்டியில் கலந்து கொள்ளும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் நாட்டு மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பை தவிர்த்து நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.