தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌. இடி. மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, திண்டுக்கல்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்.

03.09.2021: நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

04.09.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநீலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சயஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

04.09.2021, 05.09.2021: கேரள மற்றும்‌ கர்நாடக கடலோர பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

02.09.2021 முதல்‌ 06.09.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடை இடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!