இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

0
இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா 4ம் அலை தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கணக்கு குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ்

கடந்த 2020ம் சீனாவின் ஒரு பகுதியான யூகான் நகரில் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த கொடிய வைரஸால் சர்வதேச விமான நிலையம், விளையாட்டு மைதானங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து நாட்டிற்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி விட்டு இருப்பது போன்ற நடவடிக்கைகள் கடமையாக்கபட்டது.

TN TET தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான வாய்ப்பு? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

பின்னர், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், புதிய வகை வைரஸான ஒமைக்ரான் பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை தொற்று அதிகளவு பரவத் தொடங்கியது. இந்த ஒமைக்ரான் வைரஸால் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக ஒமைக்ரான் பிஏ 2.75 ரக வைரஸ் அதிக அளவு பரவுவதாக இஸ்ரேல் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 8 ஆயிரம் நபர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் என கணிசமாக கூறப்படுகின்றன. இதனால் சுகாதாரத்துறை அலுவலர்கள் தனிமனித இடைவெளி விட்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அப்போது முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆகையால், தற்போது உலகம் முழுவதும் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று பற்றி மருத்துவ ஆய்வாளர்கள் சோதனை செய்து வந்தனர். இந்த ஆய்வின் போது கொரோனாவின் தற்போதைய தாக்கத்தின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் மறு தாக்கத்தின் அளவு தொடர்ந்து கணிசமாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்வதற்கு கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!