கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் வரவேற்பு !!

0
கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் வரவேற்பு
கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் வரவேற்பு

கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் வரவேற்பு

கொவிட்-19 எனப்படும் கரோனா வைரஸ் மற்றும் அது தொடர்புடைய சுவாச வைரஸ் தொற்று சம்பந்தப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் விரைவாக உலகெங்கும் பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு திறம்பட்ட தடுப்பூசி மருந்து இல்லாத நிலையிலும், மருத்துவ ரீதியிலான வேதிப்பொருட்கள் கொண்ட தகுந்த மருந்துகள் இல்லாத நிலையிலும் இந்த நோய் தொற்றினால் உலக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

எனவே கொவிட் -19-க்கும் அதுபோன்ற சுவாச தொற்றுகளுக்கும் உகந்த வகையிலான ஆராய்ச்சித் திட்டங்களை அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சுயாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (எஸ் இ ஆர் பி) வரவேற்றுள்ளது.
உத்தேசத் திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களில் குறைந்தது ஒன்றாவது உயிரிப் பாதுகாப்பு நிலை மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் உலக சுகாதார அமைப்பு அல்லது இந்திய அரசு ஆகியவற்றின் நெறிமுறைகளின்படி சுவாச பாதிப்பு வைரஸ்களை கையாளும் நிபுணத்துவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

தகுதியான வைரஸ் இலக்குகளுக்கு எதிரான புதிய அல்லது புதிய நோக்கம் கொண்ட வைரஸ் எதிர்ப்புத் திட்டம் :

  • சுவாசத்தைப் பாதிக்கும் வைரஸ் தொற்றுகள் சார்ந்த மலிவு விலையிலான நோயறி சோதனைகள்.
  • சுவாசத்தைப் பாதிக்கும் வைரசுகளுக்கு எதிரான சோதனை ரீதியிலான தடுப்பூசிகள்.
  • வைரஸ் மீது வெப்பநிலை, ஈரப்பதம், புறஊதா கதிர் வீச்சு ஆகியவற்றின் தாக்கம்
  • சுவாச வைரஸ் பாதிப்புக்கான நோய் மாதிரிகளை உருவாக்குதல்.
  • சுவாச வைரஸ் தொற்றின்போது நோய் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்த ஆய்வுகள்.
  • கொவிட் -19 மற்றும் இதர சுவாச வைரஸ் தொற்றுகள் குறித்த தொற்றியல் ஆய்வு.

சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here