சென்னையில் தீவிரமடையும் கொரோனா பரவல் – அமைச்சர் எச்சரிக்கை!

0
சென்னையில் தீவிரமடையும் கொரோனா பரவல் - அமைச்சர் எச்சரிக்கை!
சென்னையில் தீவிரமடையும் கொரோனா பரவல் - அமைச்சர் எச்சரிக்கை!
சென்னையில் தீவிரமடையும் கொரோனா பரவல் – அமைச்சர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. இந்நிலையில், கொரோனாவின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து ஓரளவுக்கு கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்ததும் பழையபடி அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் படையெடுக்க துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

நேற்று மட்டுமே மராட்டிய மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2000பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதே போல சென்னையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே சென்னையில் 10-15% அளவிற்கு கொரோனா பரவல் உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும் கூட தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. BA 4, BA 5 ஆகிய கொரோனா தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் மூடல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் கூட அஜாக்கிரதையாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் மற்றும் 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவி வரும் வேளையில் கட்டாயமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!