கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கம்.. சட்டப்பேரவையில் புதிய கோரிக்கை!

0
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கம்.. சட்டப்பேரவையில் புதிய கோரிக்கை!
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கம்.. சட்டப்பேரவையில் புதிய கோரிக்கை!
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கம்.. சட்டப்பேரவையில் புதிய கோரிக்கை!

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல வலியுறுத்தல்கள் எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,878 ஆக பதிவாகி உள்ளது. இதில், தமிழகத்தின் ஒரு நாள் பாதிப்பு 386 ஆக தற்போது உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தொற்று பரவல் குறைவாக தான் உள்ளது. இந்நிலையில், நடந்து வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்துள்ளார்.

ICICI வங்கி வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

அதாவது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதே போல், பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதன்பிறகு பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் தற்போது பரவி வரும் ஓமைக்ரானின் புதிய வகை உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவிற்கு பாதிப்பு கொண்டதாக இல்லை. உடல் உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

Follow our Instagram for more Latest Updates

இருந்த போதிலும், தமிழக மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் கையிருப்பு, படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, பாதிப்பு எண்ணிக்கை 500 ஐ தாண்டும் பட்சத்தில் சமூக,சமுதாய, அரசியல் நிகழ்வுகள், மருத்துவமனைகள், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!